திருச்சி. மார்ச் 16,
இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில்..
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி கல்லூரி விடுமுறை, எல்லையோர வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் ஒன்றுக் கூடுமிடங்களை மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
அதே போல், நோய்களின் பிறப்பிடமாகவும், சுகாதார சீர்கேட்டிற்கு சவால்விடும் மதுபான கடைகளான டாஸ்மார்கை குறைந்தது மூன்று மாதங்களுக்கு மூடி அதனை சுற்றி வாழும், கடந்து செல்லும் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட பொருளாளர் பேரா. மைதீன் அப்துல்காதர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன், தொழிற்சங்க தலைவர் அந்தோணி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் கமால், நிர்வாகிகள் முகமது பீர்ஷா, ஆழ்வார்தோப்பு காதர், முஸ்தபா, ஜம்ஜம் பஷீர், ஜாகிர் உசேன், ரஹமத்துல்லா உள்ளிட்டோர் ‘முக கவசம்’ அணிந்து பங்கேற்றிருந்தனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்