இங்கிலாந்தில் நிராகரிக்கப்பட்ட சட்டம் இது..! விருதாச்சலத்தில் முதமிமுன்அன்சாரி MLA பேச்சு.!


மார்ச் 16,
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது..

இந்த மாபெரும் கூட்டம் மக்கள் எழுச்சியின் வெளிப்பாடாக உள்ளது. இதில் எல்லோரும் பாதிக்கப்படுவதால், போராட்ட களம் விரிவுபடுத்தப்பட வேண்டும். வட இந்தியாவைப் போல பன்மைத்தன்மையாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இங்கு தீர்மானங்களை நிறைவேற்றுகிறீர்கள். அதனை ஒரு வன்னிய சமுதாய, ஒரு தலித் சமுதாய, ஒரு தேவர் சமுதாய, ஒரு உடையார் சமுதாய, ஒரு யாதவ சமுதாய, ஒரு நாடார் சமுதாய தலைவர்கள் என பலரையும் அழைத்து, அவர்கள் மூலம் வாசித்திருக்க வேண்டும். அதுவே கோரிக்கையை வலிமைப்படுத்தும்.

எங்களையும் அழையுங்கள் என அவர்கள் நம்மிடம் சொல்லுகிறார்கள். அரசியல் தலைவர்களை அழைக்கிறீர்கள், அதுபோல சமூக-சாதி தலைவர்களையும் அழைத்து கருத்துக்களைக் கூற வைக்க வேண்டும். ஏனெனில் இது எல்லோருக்குமான ஆபத்து. எனவே, களத்தில் எல்லோரையும் உள்ளடக்கி பல இடங்களில் நடக்கிறது. அது இன்றும் பரவலாக்கப்பட வேண்டும்.

இதேபோன்றே குடியுரிமை தொடர்புடைய சட்டத்தை இங்கிலாந்திலும் கொண்டுவந்தார்கள். தேசிய குடியுரிமை அடையாள பதிவேடு என்ற பெயரில் வெள்ளையர்களை, மற்றவர்களையும் பிரிக்க நினைத்ததால் அங்கு மக்கள் கிளர்ச்சி செய்து போராடினார்கள். அதன் விளைவாக ஒரே மாதத்தில் இச்சட்டம் இங்கிலாந்தில் நிராகரிக்கப்பட்டது.

பல நாடுகளில் இதுபோன்ற குடியுரிமை தொடர்புடைய சட்டங்கள் மக்கள் எதிர்ப்பால் தோல்வியை சந்தித்துள்ளது.

நமது நாட்டில் ஒரு தாய் மக்களாக வாழும் எங்களை பிரிக்காதீர்கள் என்கிறோம். எங்களின் வேர்களை பிடுங்காதீர்கள் என போராடுகிறோம்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள் என எல்லோரும் அரசியல் பேதங்களை கடந்து ஒற்றுமையாக வாழ்கிறோம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு மத்தியில் பிரிவினையை தூண்ட வேண்டாம். வேண்டாத வேலைகளை செய்ய வேண்டாம் என்கிறோம்.

1948-ல் தொடங்கிய எப்போதும் எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுங்கள். சாதி வாரி கணக்கெடுப்பை எடுங்கள் என்கிறோம்.

மக்களின் தீராத அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள் என்கிறோம்.

CAA சட்டத்தில் ஈழத்தமிழர்களை இணையுங்கள், நேபாளம் மற்றும் பூடான் நாட்டு கிறிஸ்தவர்களையும், ரோஹிங்கியாக்களையும் இணையுங்கள். அதில் பாகுபாடு காட்டாதீர்கள் என்கிறோம். இதில் மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது. இது நம் அரசியல் சட்டத்தின் பிரிவு 5க்கு எதிரானது என்பதாலேயே இதை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், மாவட்டச் செயலாளர் முகம்மது யூசுப், மாவட்டத் துணைச் செயலாளர் APM சலீம், பண்ருட்டி யாசின், முகம்மது ரியாஸ் (கடலூர் தெற்கு), முசரப் உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை முபாரக், முஸ்தபா, ஜாஹீர் போன்ற சமூக ஆர்வலர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்வடக்குமாவட்டம்.
15.03.2020