திருச்சி ஷாகின்பாக்கில் மஜக தலைமைக்கழக பேச்சாளர் பங்கேற்று கண்டன உரை

மார்ச் 16,
திருச்சிராப்பள்ளியில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.

மஜக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் இ.ஹைதர்அலி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேசினார்.

போராட்டத்திற்கு நாளுக்கு நாள் வெகுஜன மக்கள் ஆதரவு பெருகி வருவதாகவும், ஓய்வு பெற்ற நீதியரசர்கள், இ.ஆ.ப உள்ளிட்ட உயர்பதவிகளை வகித்தவர்களும் களத்திற்கு வருது இதனை உறுதிப் படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இவர்களை பயன்படுத்தி கருத்தரங்கள் மூலமாக மக்களிடையே இச்சட்டங்களின் அபாயங்கள் குறித்து அனைவருக்கும் எடுத்து சொல்வோம். நிச்சயம் இப்போராட்டம் வெல்லும். அதுவரை தொடர்ந்து உறுதியோடு போராடுவோம் என தெரிவித்துக் கொண்டார்.

இதில், மஜக மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, பொருளாளர் மொய்தீன் அப்துல் காதர், மாவட்ட துணை, அணி, மாநகர், பகுதி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.
15/03/2020

Top