சூடுபிடிக்கும் கோவை வாழ்வுரிமை மாநாட்டு பணிகள்!! மக்களோடு மக்களாக களப்பணியில் மஜக தலைவர்கள்!!

பிப்.26.,

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி கோவையில் பிப்ரவரி 29ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும் வாழ்வுரிமை மாநாடு நடைபெறவுள்ளது.

அதன் பணிகள் குறித்து கோவை தெற்கு பகுதி, மற்றும் கிளை, நிர்வாகிகளிடம் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது Mcom. அவர்கள் கலந்தாய்வு நடத்தினார்.

அவருடன் அவைத்தலைவர் நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் JS.ரிபாயி, ஆகியோரும் உடனிருந்தனர்.

இதில் வாழ்வுரிமை மாநாடு குறித்து தெற்கு பகுதியில் இதுவரை நடந்த பணிகள் குறித்தும், மக்களை திரட்டும், பணிகள் குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் பகுதி செயலாளர் காஜாஉசேன், பொருளாளர் ரஹ்மத்துல்லா, மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாரபட்ச குடியுரிமை சட்டத்திற்கெதிராக பிப் 29 கோவை கொடிசியா திடலில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

தெற்கு பகுதியிலிருந்து மட்டும் சுமார் 70 க்கும் மேற்பட்ட சிற்றுந்துகளில் மாநாட்டு திடலை நோக்கி பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
25.02.2020