முன்மாதிரி MLA விருது 3 மதகுருக்கள் முன்னிலையில் தொழிலாளர்களிடம் சமர்பித்தார் முதமிமுன் அன்சாரி MLA!

பிப்-26;

புனே MIT கல்வி நிறுவனங்களின் அமைப்பான புனே அமைதி பல்கலைக்கழகம், மஜக பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அவர்களை, முன்மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து, டெல்லியில் கடந்த பிப் 22 ஆம் தேதி அந்த விருதை வழங்கியது.

இன்று தொகுதியில் உள்ள MLA அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில்,

இந்த விருதை தொகுதி மக்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களுக்கும் சமர்ப்பிப்பதாக சொன்னார்.

அப்போது மஞ்சக் கொல்லை கோயில் குரு அசோகன், நாகூர் தர்ஹா குடும்பத்தை சேர்ந்த செய்யது மீரான், நாகை பாதிரியார் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் , நாகையில் வசிக்கும் கைவண்டி இழுக்கும் தொழிலாளிகளான. ராஜா, ரமேஷ் ஆகியோரின் கையில் விருதை ஒப்படைத்து மகிழ்ந்தார்.

இன்று MLA அலுவலகத்திற்கு ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம், இன்ஜினியர் அசோசியேசன், மாணவர் முன்னணி, இளைஞர் பாசறை மற்றும் பல தொண்டு அமைப்புகள், ஜமாத்தினர், தமிழ் அமைப்புகள் வருகை தந்து அவருக்கு வாழ்த்து கூறினர்.

அதிமுக, திமுகவை சேர்ந்த உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் மஜக மாநில துணைச் செயலாளர் முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லா, துணைச் செயலாளர்கள் கண்ணுவாப்பா, யூசுப்தீன், அணி செயலார்கள் ஆரிப், சுல்தான், ஜாஸிம், அக்பர், ஒன்றிய செயலார்கள் ஜலால், அன்வர், அஷ்ரப் அலி, ஒன்றிய துணை செயலாளர் சதாம், நகர செயலாளர்கள் அஜீஸ், அபுசாலிஹ் மற்றும் மஜக வின் நாகை தெற்கு மாவட்டத்தின் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகளும் அலுவலகத்திற்கு வந்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.

அலுவலக ஊழியர்கள் சம்பத், தம்ஜிதீன், மற்றும் முரளி ஆகியோர் அனைவரையும் உபசரித்தனர்.

தகவல்,
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
26.02.2020