NTF சார்பில் மண்ணடியில் நடைபெற்ற குடியரசு தினசிறப்பு பொதுக்கூட்டம்..! ஹாரூன்ரசீது கண்டன உரை…!

சென்னை.ஜனவரி.28..,

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக சென்னை மண்ணடியில் குடியரசும் குடிமக்களும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் தமுமுக நிறுவனர்களில் ஒருவரான விஞ்ஞானி N.S.அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டார்.

மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்… முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களின் குடும்பத்தாருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது,
அஸ்ஸாமின் முதல்வராக இருந்தவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது அப்படியானால் இந்தியர் அல்லாதவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக எப்படி இருந்தார், அதேபோல் கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர் சனாவுல்லா விற்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்தியர் அல்லாதவர் கார்கில் போருக்கு தலைமை தாங்கினாரா, என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும், இக்கூட்டத்தில் மஜக மாநில துணை பொதுச் செயலாளர்கள் N.A.தைமிய்யா, மண்டலம்.ஜெய்னுல் ஆபீதின் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இப்பொதுக்கூட்டத்தில் NTF நிறுவன தலைவர் பி.ஜைனுல் ஆபீதீன், பொதுச் செயலாளர் A.S.அலாவுதீன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
26-01-2020