ஜன.26,
பண்ருட்டியில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் சட்டப் பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றல் நிகழ்வு நடைப்பெற்றது.
இதில், பண்ருட்டி அவுலியா நகர் ஜமாத் செயலாளர் சுல்தான் பாய் கலந்து கொண்டு கொடியினை ஏற்றிட மஜக கடலூர் (வ) மாவட்ட துணை செயலாளர் B.யாசின் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, பண்ருட்டி நகர செயலாளர் ஹாஜா மொய்தீன் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மஜக நகர பொருளாளர் ஜாகிர், இதஜ மாவட்டத் தலைவர் A.யூனிஸ் மற்றும் மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்வடக்குமாவட்டம்.