சேவை அரசியலில் பெருவாரியாக இணையும் மக்கள்..! 350க்கும் மேற்பட்டோர் மஜகவில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்..!!

வேலூர்.ஜூலை.15., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சார்பில் தரணம்பேட்டையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் செயலாளர் #S_அனிஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாம்முத்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமை மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ் துவக்கி வைத்தார்.

இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக வந்து தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்தனர்,

#மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், மஜக-வினரின் மக்கள் சேவைப் பணிகளும், பொதுச் செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி அவர்களின் சட்டமன்ற பணிகளும் தங்களை வெகுவாக ஈர்த்தாகவும், இன்னும் குடியாத்தம் நகரம் முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளிலும் இது போல தீவிர உறுப்பினர் சேர்க்கை சிறப்பு மையங்கள் தொடங்கி, சேவை அரசியலில் பல்வேறு உறுப்பினர்களை சேர்க்க தாங்களும் துணை புரிவோம் என்றனர்.

இதில் முன்னால் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், MJTS ஆம்பூர் நகர செயலாளர் முஜம்மில், குடியாத்தம் நகர துணை செயலாளர்கள் சலீம்,சாபீர், நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கெளவுஸ், கிளை செயலாளர் அல்தாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#குடியாத்தம்_நகரம்
#மஜக_வேலூர்_மேற்கு_மாவட்டம்
15.07.2018