நாச்சிகுளத்தில் மஜக சார்பில் குடியரசுதின விழா! கிராமசபாகூட்டத்தில் CAAக்கு எதிராக மனு!!


ஜன.26,

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் குடியரசு தின விழா மஜக கிளை செயலாளர் M.ரியாஸ் அஹமது தலைமையிலும் பஹ்ரைன் மண்டல ஆலோசகர் ஜான் முகம்மது மற்றும் KPN.கபீர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

மஜகவின் 8 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் ராயல் காதர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிட மஜகவின் மாநில செயலாளரும் 5 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினருமான நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் சட்டப் பாதுகாப்பு உறுதி மொழியை வாசிக்க வருகை தந்த அனைவரும் உறுதி ஏற்று கொண்டனர்.

இதில், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, மு. ஊராட்சி மன்ற தலைவர் மகேந்தின், ஒன்றிய கவுன்சிலர் ரோஜாபானு, அன்வர் அலி மற்றும் ஜமாத்தார்கள், விவசாயிகள், வணிகர்கள், இளைஞர்கள், ததஜ வினர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் மஜகவினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு திரண்டு சென்ற மஜகவினர் அக்கூட்டத்தில் மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறகோரியும் தமிழக அரசு இச்சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற கூடாது என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்ற கோரி மனு அளித்தனர்.