சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் குடியரசு தினவிழா! முதமிமுன் அன்சாரி MLA தேசிய கொடி ஏற்றினார்


இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில், தாளாளர் தாவூத் மியாகான் தலைமையில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

சென்னையில் உள்ள கல்லூரிகளில், இங்கு தான் NCC, NSS உள்ளிட்ட மாணவர் சேவை படையின் நிகழ்ச்சிகள் முழுமையாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது இக்கல்லூரியின் ஒரு சிறப்பாகும்.

இதில் சிறப்பு விருந்தினராக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்னர் NSS மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

முன்பு இதே கல்லூரியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி போன்றோருக்கு இதே போன்ற மரியாதை இக்கல்லூரியில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிறகு சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு சுழல் கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கி குடியரசு தின உரையாற்றினார்.

முன்னதாக சாரணர் படையின் கேப்டன் ஹாஜி அவர்கள் படையினரின் துப்பாக்கி பயிற்சி மற்றும் முகாம் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

இந்நிகழ்வில், முதல்வர் டாக்டர் M.முகம்மது ஷெரிப், துணை முதல்வர் டாக்டர் M.அப்துல் தவாப், காயிதே மில்லத் அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் A. ரபீக், பொருளாளர் ஆடிட்டர் சஹாபுதீன், இணைச் செயலாளர்கள் ஆடிட்டர் இஸ்மாயில், என்ஜினியர் சாகுல் ஹமீது, வழக்கறிஞர் M.H.B.தாஜ்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் துறை தலைவர் பேரா.ஹாஜாகனி உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.

மஜக துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, MJTS மாநில தலைவர் பம்மல் சலீம், தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் தாரிக், இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஜேக்கப், கவிஞர். விஜய் ஆனந்த், ஜானகிராமன்
உட்பட பலரும் 2 மணி நேரம் நிகழ்ச்சிகளை கண்டுக் களித்தனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கல்பட்டு_மாவட்டம்.