#மஜக மாநிலப் பொருளாளர் SSஹாரூன் ரசீது பங்கேற்று கண்டன உரை!
டிச.19,
அதிராம்பட்டினத்தில் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் தக்வா பள்ளிவாசல் அருகிலிருந்து கண்டன பேரணி துவங்கி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண்ரசீது கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, இராம.குணசேகரன், சி.வி.பக்கிரிசாமி, காளிதாஸ், அபுபக்கர் சித்திக், கோவை செய்யது, தேங்கை சர்புதீன், சபியுல்லா ஹஜ்ரத், அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஒருஙகிணைப்பாளர் ஜியாவுதீன் உள்ளிட்டவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதில், மஜக துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தஞ்சை (தெ) மாவட்ட செயலாளர் அப்துல் சலாம், பொருளாளர் பசீர் அஹமது, துணை செயலாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, துணை செயலாளர் யாசர் அரபாத், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அகமது கபீர், துணை செயலாளர் மைதீன், மு.ஜித்தா மண்டல IKP நிர்வாகி ஷேக் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்றனர். இறுதியில் சாகுல் ஹமீது அவர்கள் நன்றி கூறினார்.
இப்போராட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும், ஜமாத்தார்களும், பல்வேறு அரசியல், இயக்க பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகரின் அனைத்து பகுதியிலும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு முழுகடையடைப்பு வெற்றிகரமாக நடைப்பெற்றது.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைதெற்குமாவட்டம்.