டிச.20,
திருச்சி காந்தி மார்க்கெட் காதர் மஸ்ஜிதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் ஜூம்மா உரையாற்றினார்.
அப்போது CAA மற்றும் NRC சட்டங்களை எதிர்த்து இந்திய பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களின் நியாயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
பூட்டானிலும், நேபாளத்திலும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்கும், இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழர்களுக்கும் புதிய குடியுரிமை சட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமா? என்றவர், அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களுக்கு இதில் பாராபட்சத்துடன் அநீதி இழைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
நடைபெறும் போராட்டங்களை மக்கள் நடத்தும் கிளர்ச்சி என்று வர்ணித்தவர்,இதில் அரசு படைகளின் சார்பில் தான் வன்முறைகள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது என்றார்.
அதற்கு ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், மங்களுர் போலிஸ் அராஜகங்களும் உதாரணங்கள் என்றார்.
இந்த போராட்டம் வெற்றிப்பெற வேண்டுமெனில் முழு அமைதியுடன் வழிநடத்தப்பட வேண்டும் என்றே நாங்கள் அனைவரும் அக்கறை காட்டுகிறோம் என்றார்.
அவ்வாறுதான் தமிழகத்தில் போராட்டங்கள் எழுச்சியோடு நடைப்பெற்று கொண்டு இருக்கிறது என்றும் இதில் சாதி, மத பேதமின்றி மக்கள் பங்கேற்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக ,தேசத்தின் ஒற்றுமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், நல்லாட்சிக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் என்றார்.
இந்நிகழ்வில் ஜமாத் தலைவர் உசேன் ஹாஜியார், செயலாளர் அய்யூப் ஹாஜியார், பொருளாளர் பாபு ஹாஜியார், இமாம் முகம்மது மீரான் மிஸ்பாஹி, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் காதர் ஹாஜியார் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
மஜக மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி , மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம்ஷா, பொருளாளர் பேராசிரியர் மைதீன், துணைச் செயலாளர்கள் ரபிக், சேக்தாவூத், பக்கீர் மைதீன் மற்றும் நிர்வாகிகள் அப்பாஸ், அசார், பீர்ஷா ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.