தஞ்சை வல்லத்தில் மஜக மாநிலப் பொருளாளர் SSஹாரூன்ரசீது பங்கேற்று குத்பாபிரசங்கம்!

டிச.20,
தஞ்சை வல்லத்தில் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின் ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து கட்சியினர் பங்குப் பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண்ரசீது கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

ம.தி.மு.க வளைகுடா அமைப்பாளர் வல்லம் பஷீர் மற்றும் அமல ஸ்டாலின், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அஹமது கபீர், MKP பக்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ், தி.மு.க நகரச் செயலாளர் கல்யாண சுந்தரம், தி.மு.க. மாவட்ட பிரதி நிதி மாணிக்கம், தமிழ் தேச மக்கள் முன்னனி தோழர் அருண் சவுரி சட்டத்திற்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக வல்லம் ஜூம்மா பள்ளிவாசலில் குடியுரிமை சட்டத்தினால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விழிபுணர்வை உண்டாக்கும் வகையில் ஜூம்மா பிரசங்கம் செய்தார்.

இதில், மஜக மாவட்ட துணை செயலாளர் முகைதீன், தஞ்சை மாநகர் செயலாளர் அப்துல்லாஹ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல், வாணியம்பாடி அக்மல் மற்றும் வல்லம் ஜமாத்தார்கள் வியாபாரிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைமாநகர்மாவட்டம்