நாகை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,வதிஸ்ட்டாச்சேரியில் புதிய கிளை உதயம்.

நாகை.செப்.10., நாகை வடக்கு மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம், வதிஸ்ட்டாச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை துவங்க கூட்டம் 09.09.2018 ஞாயிறு அன்று இரவு 8 மணியளவில் நடைப்பெற்றது.இதற்கு நாகை வடக்கு மாவட்ட அமைப்புகுழு தலைவர் சங்கை தாஜ்தீன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கிளை செயலாளராக M.யாசர் அரபாத்,கிளை பொருளாளராக S.அக்பர் அலி, துணை செயலாளராக சுபைது,மாணவர் இந்தியா செயலாளராக S.ஹாஜா ஆகியோர்கள் தேர்வு ஒரு மனதாக செய்யப்பட்டனர்.

செப்டம்பர்-15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 14 ஆண்டுகளுக்கு நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் சாதி,மத,அரசியல் பேதமின்றி பொது மன்னிப்பு கீழ் விடுதலை செய்ய வேண்டுமென ஆட்சியர்களிடம் வலியுறுத்துவது.

மக்களை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத பெட்ரோல்,டீசல்,கேஸ் விலையை உயர்த்தி கொண்டுபோகும் மத்திய அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் கிளை செயலாளர் M.யாசர் அரபாத் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி.
#MJK_IT_WING.
#நாகை_வடக்கு_மாவட்டம்.