தொடர் விபத்துகளை தடுக்க சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்த மஜக வினர்..!

கோவை.செப்.01., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துகடவு பகுதிக்குட்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் சாலையின் நடுவே தடுப்புகள் இல்லாததால் தொடர் விபத்துகள் நடைபெற்று வந்தன.

இதை தொடர்ந்து மஜக சார்பில் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் பகுதி செயலாளர் காதர், தலைமையில் பொருளாளர் அபு, துணை செயலாளர் ஹாருண்ரஷீது, மற்றும் நிர்வாகிகள் இணைந்து சாலைகளின் நடுவே தடுப்புகள் வைத்து கயிறுகளை கொண்டு தடுப்புகள் அமைத்தனர்.

மஜக வின் இச்செயலை அப்பகுதி மக்களும் அந்த வழியாக வாகனத்தில் சென்றோரும் வெகுவாகப் பாராட்டினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்.
01.09.2018