திருப்பூரில் எழுச்சியோடு நடைப்பெற்ற மஜக செயல்வீரர்கள் கூட்டம்.! மாநில துணைச்செயலாளர் பங்கேற்பு.!

திருப்பூர்.ஆக.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூர் சிராஜ் மஹாலில் உற்சாகமாக நடைப்பெற்றது.

எழுச்சியோடு நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட துணைச்செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக மாநில துணைச்செயலாளர் டி.கே பசீர் அவர்கள்
தலைமை செயற்குழு உறுப்பினர் பி.எம் இக்பால் ஆகியோர்
பங்கேற்றனர்.

மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகளுக்கு கட்சி விதி நிர்ணய சட்டம் (பைலா) புத்தகம்.
கட்சியின் செயல்திட்ட அறிக்கை மாநில துணைச்செயலாளர் வழங்கினார்
கூட்டத்தில் ஒரு ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்கு மாவட்ட பொருளாளர் தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட துணைச்செயலாளர் லியாகத் அலி அவர்களால் அழகானமுறையில் தொகுத்து வாசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முத்தாய்ப்பாக பிற சமுதாய அரசியல் கட்சியில் இருந்து விலகி மஜகவில் இணைந்து மாவட்ட துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட முஜிபுர் ரகுமான் அவர்கள்,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பான செயல்பாடுகளை பட்டியலிட்டார்.

சிறப்புரையாற்றிய மாநில துணைச்செயலாளர் டி.கே பசீர் அவர்கள் கேரள வெள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிக அளவில் நிவாரண நிதி திரட்ட வேண்டும் என அறிவுறுத்தியதோடு,
எதிர்வரும் செப்டம்பர் 7 அன்று நடைபெறும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பெரும் வெற்றியடைய ஆற்றவேண்டிய களப்பணி குறித்து விரிவுரை நிகழ்த்தினார்.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மஜகவின் அரசியல் செயல்பாடுகளை பார்த்து,
திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட யாசின்பாபு நகர் வள்ளியம்மை நகர் மாஸ்கோ நகர்.அங்கேரிபாளையம் தட்டான் தோட்டம்.உள்ளிட்ட பல பகுதிகளை சார்ந்த இளைஞர்கள் மாநில துணைச்செயலாளர் கோவை டி.கே பசீர் அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்ட துணை செயலாளர்கள் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

தகவல் தொழில்நுட்ப அணி முன்னால் மாநில துணைச்செயலாளர் காதர்கான்.
மாவட்ட துணைச்செயலாளர்கள்.ராயல் பாட்சா.முஜிபுர் ரஹ்மான்.ஈஸ்வரன்.லியாகத்அலி.

மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள்
செயலாளர் அசாருதீன். பொருளாளர் சலீம்.து.செயலாளர்கள்.மன்சூர்.அபு.
மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள். கபீர்.சிக்கந்தர்.
மாவட்ட வர்த்தகர் அணி நிர்வாகிகள்.
செயலாளர் அபுதாகீர்.பொருளாளர் சேக் ஒலி.துணைச்செயலாளர் ஹ்மான்.
மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள்.
செயலாளர் நெளஃபல் ரிஸ்வான்.பொருளாளர் ஆசிக் இக்பால்.
து.செயலாளர்கள் கார்த்தி.ஜாபர் .
சிறப்பு விருந்தினராக AS.செப்பல்ஸ் உரிமையாளர் அப்துல் சமது.மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட்ட
மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக இளைஞரணி மாவட்ட பொருளாளர் சலீம் நன்றியுரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
19-08-2018