தீவிர வெள்ள நிவாரண நிதி திரட்டிய வேலூர் மஜகவினர்..! மாநில இளைஞர் அணி பொறுப்பாளர் உடன் பங்கேற்பு..!!

வேலூர். ஆக.19., வேலூர் கிழக்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கேரள மக்களுக்கான நிவாரண நிதி, பள்ளி வாசல்கள், தேவாலயங்கள், கோயில்கள், கடை வீதிகள் வாரியாக கடந்த 2 நாட்களாக நிதி சேகரிப்பு நடைபெற்று வருகின்றது..

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொட்டித் தீர்த்து வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை அங்கு பெய்து வருவதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இம் மாநிலத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்த அளவிற்கு இயற்கை சீற்றங்களால் யாரும் பாதிக்கப்பட்டிருக்க முடியாது என்கிற அளவிற்கு சென்று கொண்டு இருக்கிறது கேரள மக்களின் நிலை,வெள்ளத்தில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கோடும்,
தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கேரள மக்களுக்காக வேலூர் கிழக்கு மாவட்டம் வீதி, வீதியாக நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.

இதில் அனைத்து தரப்பு மக்களும் தானாக முன்வந்து பெரும் அளவில் தங்களது நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர்.

மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸின் அவர்களின் தலைமையில் , மாவட்ட நிர்வாகிகள் குஸ்ரு கௌஸ் மொஹிதீன்,ஜாகீர் உசேன், சையத் உசேன், அமீன், சையத் காதர், பட்டேல் ஷமீல்,அசார் பாஷா, சாதிக், மண்டல நிர்வாகிகள் முஹம்மத் பாயிஸ், அஸ்கர் அலி, ஆசிப் அப்ரோஸ், ஷேக் ஜபார், சையத் ஜபார், கிளை நிர்வாகிகள் முஹம்மத் இஸ்மாயில், ஹயாத், அன்சார்,நசீர், நசிருல்லாஹ், பாரூக், இம்ரான் மற்றும் மனிதநேய சொந்தங்கள் நிதி சேகரிப்பில் கலந்துகொன்டனர்.

முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட தொகை வசூலானது. அடுத்தாக முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரையும் சந்திப்பதாக திட்டமிட்டுள்ளோம்.

இறைவன் நாடினால் நாளையும் தொடரும்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
19.08.2018