You are here

கேரளா மக்களுக்காக மஜக சார்பில் கோவையில் நிவாரண நிதி சேகரிப்பு.!

கோவை.ஆக.19., மனித நேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் தெற்கு பகுதி சார்பாக கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நம் உறவுகளுக்காக பகுதி செயலாளர் காஜாஉசேன், தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாக பிரச்சாரம்.

குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் கேரள மக்களுக்காக உணவு உடமைகள் பொருளாதாரம் தந்து உதவினர்.

இந்நிகழ்வில் துணை செயலாளர் அப்பாஸ், ரஹ்மத்துல்லா, மற்றும் குனியமுத்தூர், காளவாய், 2வது வார்டு, விஜயலட்சுமி மில், மைல்கல், கிளை நிர்வாகிகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் கேரள மக்களுக்காக வசூல் செய்யப்பட்ட 13.800 ரூபாயை முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
19-08-18

Top