நாங்கள் தொப்புள் கொடி உறவுகள்..! முத்துப்பேட்டை இஃப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!!

முத்துப்பேட்டை. ஜூன்.10., திருவாரூர் மாவட்டம் #முத்துப்பேட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நகர செயலாளர் தக்பீர் S. நெய்னா முகம்மது தலைமையில் #சமூக_நல்லிணக்க #இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இதில் #மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA , திருத்துறைப்பூண்டி #திமுக சட்டமன்ற உறுப்பினர் #ப_ஆடலரசன்_MLA, தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் #PR_பாண்டியன், மஜக துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், TVS நிறுவன அதிபர் Dr.S.M.ஹைதர் அலி, ஆகியோர் பங்கேற்றனர்.

பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டையில் எல்லா சமூக மக்களையும் அழைத்து ஒரு பெரும் சமூக நல்லிணக்கத்தை மஜகவினர் ஏற்படுத்தியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஆடலரசன் MLA அவர்கள் பேசும்போது இஸ்லாத்தின் கொள்கை நிலைப்பாட்டை பாராட்டி “அது மதமல்ல மார்க்கம்” எனவே தான் அனைவரையும் ஈர்க்கிறது என்றார்.

TVS. ஹைதர் அலி அவர்கள் நோன்பின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.

PR. பாண்டியன் அவர்கள் பேசும்போது எங்கள் விவசாய சங்கத்தை பார்த்து “நீங்கள் ஏன் முஸ்லிம்களையும் இணைத்து போராடுகிறீர்கள்? ” என்று சிலர் கேட்டனர், டெல்ட்டா மாவட்டங்களில் 40சதவீதம் விவசாய நிலங்கள் முஸ்லிம்களிடம் தான் இருக்கிறது. அவர்கள் எங்கள் சகோதரர்கள் எனவே தான் எல்லோரையும் இணைத்து போராடுகிறோம் என்று கூறியதாக பேசியதும் அரங்கம் #கைத்தட்டலால் அதிர்ந்தது.

பிறகு பேசிய மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள். முஸ்லிம்கள் இந்த மண்ணின் உரிமைக்காக போராடுபவர்கள், நாங்கள் நிலத்திற்க்காக, விவசாயத்திற்காக, நீருக்காக, சுற்று சூழலுக்காக எல்லோருடனும் இணைந்து போராடுகிறோம். அது சிலருக்கு பிடிக்கவில்லை அதற்காக நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

தொடர்ந்து எல்லா மக்களுடனும் இணைந்து தமிழக வாழ்வாதாரத்திற்காக போராடுவோம். இங்குள்ள எல்லா சாதியினரும் #எங்கள்_தொப்புள்_கொடி_உறவுகள் என்றார் பலத்த கைத்தட்டலுக்கிடையே..!

இந்நிகழ்வில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட செயலாளர் சீனி ஜகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன், நகர் துணை செயலாளர்கள் கமால் நாசர், பாசித் அகமது, நகர் MJTS அஜ்மீர் கான், நகர் இளைஞர் அணி முகம்மது ஆசிப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியில் நகர் பொருளாளர் H.பஷீர் அலி நன்றியுரை கூற இஃப்தார் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்
#மஜக_முத்துப்பேட்டை_நகரம்
10.06.18