டிச.6 மாவட்ட தலைநகரங்களில் இரயில் நிலையங்கள் முற்றுகை… மஜகவின் மாநில செயற்குழுவில் முடிவு…

image

image

நவ.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு இன்று (12-11-2016) கோவையில் நடைபெற்றது.

மஜக பிப்ரவரி.28, 2016 அன்று தொடங்கப்பட்ட பிறகு மார்ச் 2016ல் முதல் தலைமை செயற்குழு சென்னையில் நடைபெற்றது. அடுத்து இரண்டாம் செயற்குழு இன்று கோவையில் நடைபெறுகிறது.

கோவையில் “ஆயிஷா மஹால்” ல் கூடிய இச்செயற்குழு காலை 11 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது.

இச்செயற்குழு நிகழ்ச்சிகளை அவைத்தலைவர் மவ்லானா.நாசர் உமரி நெறிப்படுத்தினார்.

அடுத்து மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் நீதி போதனைகள் நிகழ்த்தினார்.

பிறகு மாநில செயலாளர் கோவை.சுல்தான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து எதற்காக இந்த செயற்குழு கூடியுள்ளது என்பது பற்றி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் அவர்கள் நோக்க உரையாற்றினார் அப்போது கட்சி வளர்ச்சி குறித்தும் நிதி நெருக்கடியால் பல பணிகள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

அதன் பிறகு மாவட்டங்கள் சார்பில் வரிசையாக தலைமை வளர்ச்சி நிதி தலைமைக்கு வழங்கப்பட்டது.

பிறகு மஜகவின் அமைப்பு நிர்ணய சட்டம்(BYLAW) பறந்து விரிந்த பார்வையோடு உருவாக்கப்பட்ட மஜகவின் பைலா விரிவாக துணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி அவர்கள் விவரித்தார்கள்.

இதை செயற்குழு உறுப்பினர்கள் குறிப்பெடுத்தனர். அவர்கள் பார்வைக்கு நகல் வழங்கப்பட்டது.
பிறகு தொழுகை மற்றும் மதிய உணவு இடைவேலை விடப்பட்டது. அனைவருக்கும் பல்சுவை உணவுகளை வழங்கி கோவை மஜகவினர் உற்சாகமூட்டினர்.

பிறகு மதியம் 3மணிக்கு அவை மீண்டும் தொடங்கியது. அப்போது மஜகவின் கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை.நாசர் அவர்கள் கலகலப்பான் உரை நிகழ்த்தினார்.

பிறகு கொள்கைப் பரப்பு செயலாளர் மன்னை. செல்லச்சாமி அவர்கள் திராவிட இயக்க கட்டமைப்பு வரலாறு குறித்து பேசினார்.

பிறகு 14 தீர்மானங்களை மாநில துணைப் பொதுச்செயலாளர் ஈரோடு பாரூக், மாநில துணைச் செயலாளர்கள் நாச்சிக்குளம். தாஜுதீன், சாதிக் பாட்சா, ராசுதீன் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ்,கோவை பசீர், அமீன் சிக்கந்தர், திண்டுக்கல் அன்சாரி ஆகியோர் வாசித்தனர்.

நிறைவாக மஜக பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் மஜகவின் வளர்ச்சி குறித்தும் அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்தும் உற்சாக உரை நிகழ்த்தினார். நிறைவாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அப்பாஸ் அவர்கள் நன்றி கூர பொதுக்குழு நிறைவுபெற்றது…

தகவல் : மஜக மாநில ஊடகபிரிவு