Year:
தேர்தல் சூழ்ச்சிகளில் ஒன்றாக பாஜக அரசு #CAA வை அமல்படுத்தியுள்ளது. இதில் ஈழத்தமிழர்களையும், நேபாள கிருத்துவர்கள், அண்டை நாட்டு இந்திய பூர்வகுடி முஸ்லிம்களையும் உள்ளடக்க வேண்டும். இதில் பாகுபாடு கூடாது என்பதே மஜக-வின் நிலைபாடாகும் அநீதிக்கு எதிரான ஜனநாயக எதிர்ப்புகள் தொடரும். https://twitter.com/ThamimunansariM/status/1767235696010625303?s=19
நெல்லையிலும் தொடரும் எழுச்சி…. 300 க்கும் மேற்பட்டோர்… தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்! 3 கிமீ தூரம் அணிவகுத்த வாகன அணிவகுப்பு….
மார்ச்.11., கடந்த ஒரு வருடமாக மஜக-வில் பல்வேறு மாவட்டங்களில் - பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் கூட்டம், கூட்டமாக புதிதாக இணைந்து வருகின்றனர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கோவை, மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையிலும் இன்று 300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளிலிருந்து விலகி தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டார்கள். இதில் 50 சதவீதத்தினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வை முன்னிட்டு நெல்லை டவுன் - வண்ணாரப்பேட்டை தொடங்கி மேலம்பாளையம் நோக்கி 3 கி.மீட்டர் தூரத்திற்கு கார்கள், பைக்குகளில் மஜக கொடிகளுடன் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொருளாளர் J.S.ரிஃபாயி, ஆகியோர் பங்கேற்ற வாகன பேரணி நடைப்பெற்றது. வழியெங்கும் பொது மக்கள் கையசைத்து வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு மண்டப வாசலில் தலைவர் அவர்கள் மஜக முழக்கங்களுக்கிடையே கொடியேற்றினார். பிறகு மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் பாளை. பாரூக் தலைமையில் இணைப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பொருளாளர் J.S.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் நெய்வேலி. இப்ராகிம், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் நெல்லை. பிலால் ஆகியோர் பேசினர். மாநிலத் துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம் நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிறைவாக பேசிய தலைவர் அவர்கள், புதிதாக வந்தவர்களை
கோவையில்… மஜக வெற்றிக்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கேட் போட்டி…
மார்ச்:11., கோவை மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மினார் ஸ்போர்ட்ஸ் கிளப், குனியமுத்தூர் ஏடி7எஸ் அரேனா நண்பர்கள் மற்றும் ஆர்.டூ.ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய 16 அணிகள் பங்குபெற்ற 'மஜக வெற்றிக்கோப்பைக்கான" மாபெரும் கிரிக்கெட் போட்டி மாவட்டச் செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் தலைமையில் குனியமுத்தூர் ஏடி7எஸ் அரேனா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் முறையில் மோதியது. இறுதி போட்டியில் கிங் காங் அணி வெற்றி பெற்று மஜக வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்த அணிக்கு கோப்பையும், ரூபாய் 8,000 வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு கோப்பையையும், ரூபாய் 5,000, மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு கோப்பையும் மற்றும் 3,000 பரிசுத்தொகையை மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் M.H ஜாபர் அலி, மாநில இளைஞர் அணி பொருளாளர் P.M.A.பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் H. M முகம்மது ஹனீஃப், S. A.ஜாபர் சாதிக்,KTU காஜா,
நெல்லையில்… நெல்லை நீதி மன்ற வழக்கறிஞர்கள்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் சந்திப்பு…
மார்ச். 10 திருநெல்வேலிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று வருகை புரிந்தார். அவரை நெல்லை நீதிமன்ற வழக்கறிஞர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்கள். அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைக்கு மஜக ஆதரவளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதில் மாநில செயலாளர் நெய்வேலி.இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பேராவூரணி. சலாம், மாவட்ட செயலாளர் பாளை. பாருக், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் நெல்லை. அலிஃப் பிலால், மாவட்ட அவை தலைவர் நிலா.இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_நெல்லை_மாவட்டம் 10.03.24.