நெல்லையிலும் தொடரும் எழுச்சி…. 300 க்கும் மேற்பட்டோர்… தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்! 3 கிமீ தூரம் அணிவகுத்த வாகன அணிவகுப்பு….

மார்ச்.11.,

கடந்த ஒரு வருடமாக மஜக-வில் பல்வேறு மாவட்டங்களில் – பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் கூட்டம், கூட்டமாக புதிதாக இணைந்து வருகின்றனர்,

கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கோவை, மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையிலும் இன்று 300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளிலிருந்து விலகி தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டார்கள்.

இதில் 50 சதவீதத்தினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை முன்னிட்டு நெல்லை டவுன் – வண்ணாரப்பேட்டை தொடங்கி மேலம்பாளையம் நோக்கி 3 கி.மீட்டர் தூரத்திற்கு கார்கள், பைக்குகளில் மஜக கொடிகளுடன் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொருளாளர் J.S.ரிஃபாயி, ஆகியோர் பங்கேற்ற வாகன பேரணி நடைப்பெற்றது.

வழியெங்கும் பொது மக்கள் கையசைத்து வரவேற்பு கொடுத்தனர்.

அதன் பிறகு மண்டப வாசலில் தலைவர் அவர்கள் மஜக முழக்கங்களுக்கிடையே கொடியேற்றினார்.

பிறகு மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் பாளை. பாரூக் தலைமையில் இணைப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொருளாளர் J.S.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் நெய்வேலி. இப்ராகிம், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் நெல்லை. பிலால் ஆகியோர் பேசினர்.

மாநிலத் துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

நிறைவாக பேசிய தலைவர் அவர்கள், புதிதாக வந்தவர்களை வரவேற்று பேசினார்.

மஜக-வில் இணைபவர்களை அரசியல் மயப்படுத்துவதன் அவசியம் குறித்தும், நடப்பு அரசியல் குறித்தும் பேசினார்.

பிறகு இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இணைப்பு நிகழ்வில் தலைவர் அவர்கள் அனைவருக்கும் கட்சி துண்டை அணிவித்து, முதல் கட்டமாக அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கினார்.

பிறகு டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படும் என்பதையும் அவர்களிடம் கூறினார்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தை பகுதி முழுதும் மஜக கொடிகள் கட்டப்பட்டு, நெல்லை நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

இனி ‘நெல்லையில் மஜக-வின் அரசியல் படு உற்சாகமாக இருக்கும் ‘ என்ற பேச்சு பரபரப்பாகி உள்ளது.

அது பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் எதிரொலித்தது.

பல ஊடகங்கள் தலைவரின் பேட்டியை நேரலை செய்தனர்.

நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஹஸன், தென்காசி மாவட்ட செயலாளர் அஜ்மீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் நெல்லை மண்டல இளைஞர் அணி செயலாளர் அஷ்ரஃப், நெல்லை மாவட்ட அவைத்தலைவர் நிலா இக்பால், மாவட்டபொருளாளர்
முகம்மது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இளநீர் அப்துல்,
50 வார்டு முஹம்மது இஸ்மாயில்,
முருகேசன், ஆசிக், மாவட்ட இளைஞரணி செயலாளர்
பால்.சேக் மற்றும் மாவட்ட அணி, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்
10.03.2024.