36 முஸ்லிம்கள் உட்பட 43 புரட்சியாளர்கள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டதை நினைவு கூறும் வகையில் மே 17 இயக்கம் சார்பில் கோவை உக்கடத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் மாநாடு நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்பாஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் மஜக மாநில செயலாளர் எம்.எச். ஜாபர் அலி, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் PMA.பைசல் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் வருடம் தோறும் தொடர்ந்து இந்நிகழ்வை முன்னெடுப்பதால் அவருக்கு வாழ்த்து கூறி சால்வை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சிறக்க பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஊக்குவிப்பு குறித்தும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் H.M.முஹம்மது ஹனீப், A.S.ஜாபர் சாதிக், KTU.காஜா, ஆயில் ஹக்கிம், அன்வர் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் MMR.முஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரௌஸ் கான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜே.பயாஸ், பொருளாளர் அப்துல் சலீம், துணைச் செயலாளர் ஜாவித் உள்ளிட்ட திரளான மனிதநேய சொந்தங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Month:
பெ.மணியரசன் பவளவிழா….
தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவரும், தமிழகத்தின் அறிவுசார் சமூக செயல்பாட்டாளருமான தோழர் பெ. மணியரசன் அவர்களின் 75-ஆம் ஆண்டு #பவள_விழா நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், நீதியரசர் அரி பரந்தாமன், இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். காலை அமர்வில் தோழர் பெ.மணியரசன் அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூலான "எங்கிருந்து இங்கு" என்ற நூலை நீதியரசர் அரி பரந்தாமன் வெளியிட மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் பெற்றுகொண்டனர். இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... தமிழகத்தில் கொள்கை சார்ந்த இயக்கங்களில் தமிழ் தேசிய பேரியக்கம் முக்கியமானது . ஐயா பெ. மணியரசன் அவர்கள் தமிழ் தேசியத்தை முன்னெடுத்து வருபவர். நாங்கள் மிகவும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர். நான் MLA வாக இருந்த போது , சட்டமன்ற விடுதிக்கு வந்து உரையாடி உள்ளார். நானும் தஞ்சைக்கு வரும் போது
நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிகளாக, பொறுப்புக் குழு தலைவராக, S.ஜமால்தீன் த/பெ; I.சம்சுதீன் 41, கலைவாணர் தெரு, அரியமங்கலம், திருச்சி-620010 அலைபேசி; 7092957211 பொறுப்புக் குழு உறுப்பினர்களாக, 1) A.ஷேக்தாவுத் த/பெ; S.அஜீபா 49A, வரகனேரி, முஸ்லிம் தெரு, திருச்சி-620008 அலைபேசி; 9042501028 2) S.அபுபக்கர் சித்திக் த/பெ; சாகுல்ஹமீது 4/520, 6-வது தெரு, பாத்திமாபுரம், வடக்கு காட்டூர், திருச்சி-620019 அலைபேசி; 9865214224 3) M.சையதுமுஸ்தபா த/பெ; R.மைதீன் No34c, 4-வதுதெரு, துரைசாமி புரம், பாலக்கரை, திருச்சி-1 அலைபேசி; 9865947171 4) K.அன்வர் பாட்சா த/பெ; M.கமாலுதீன் D/43, முதல் மாடி, துரைசாமிபுரம், 4-தெரு, திருச்சி-620001 அலைபேசி; 9360518265 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 08.06.2023
நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) G.அய்யூப் கான் அலைபேசி; 9894190391 2) D.சர்தார் பாஷா அலைபேசி; 94430 52164 MJVS மாவட்ட செயலாளராக, S.அன்சர் ஜான் அலைபேசி; 9787809800 IKP மாவட்ட செயலாளராக, முஹம்மத் யஹ்யா அலைபேசி; 9629620662 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஓத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண் ; மு. தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளார் மனிதநேய ஜனநாயக கட்சி 07-06-2023
மதிமுக புதிய நிர்வாகிகள்… வைகோ உள்ளிட்டோர் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்…
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள 'தமிழர் இதயம்' அண்ணன் வைகோ அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காகவும் தன்னையே வருத்திக்கொண்டு போராடிய அவரின் அரசியல் தியாகங்கள் மறக்க முடியாதவை. மீண்டும் அக்கட்சிக்கு தலைமை ஏற்பதன் மூலம் அவரது சேவைகள் தமிழகத்திற்கு தொடர்ந்து கிடைக்கவிருப்பது அறிந்து மகிழ்கிறோம். அரசியல் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள சூழலில் அவர் ஒரு போர் கருவியாக இயங்குவார் என்பதில் ஐயமில்லை. மதிமுகவுக்கு முதன்மைச் செயலாளராக தேர்வாகியுள்ள நண்பர் துரை வைகோ அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சமகால தமிழக அரசியலில் துடிப்புமிக்க இளைய அரசியல் தலைவராக உருவெடுத்துவரும் அவரது பணிகள் திராவிட அரசியலுக்கு வலு சேர்க்கும் என நம்புகிறோம். ஆடிட்டர் அ. அர்ஜுன் ராஜ், தோழர் மல்லை. சத்யா, மு.செந்திலதிபன், டாக்டர் ரொஹையா, K.A.M நிஜாம் உள்ளிட்ட மதிமுகவின் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசியலில் மதிமுக புதிய உயரத்தை தொட்டிட வேண்டும் என்ற எமது ஆவலையும் வெளிப்படுத்தி மகிழ்கிறோம்.