மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் பத்திரிக்கையாளர்களை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது... எதிர்வரும் ஜூன் 23 அன்று பீஹார் தலைநகர் பாட்னாவில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் எதிர்கட்சிகளை ஒரணியில் திரட்டி ஆலோசனை செய்வதை பாராட்டுகிறோம். வரவேற்கிறோம். நாட்டின் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்டம், பன்முகத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க எதிர்வரும் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது அவசியமாகும். பேதங்களை கைவிட்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஒரணியில் திரளும்போது, இதை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியும் செயல்பட வேண்டும். குறிப்பாக மாநில கட்சிகளுக்கு அவர்களுக்குள்ள பலத்தை புரிந்துக்கொண்டு அவர்களுக்குரிய அரசியல் மரியாதையை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அடுத்து பத்திரிக்கையாளர்கள், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்தவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை எதிர்க்க முடியாது என்றவர், விஜய் தனது சித்தாந்தத்தை தெளிவுப்படுத்தி, ரசிகர்களை அரசியல் படுத்த வேண்டும் என்றார். பெரியார், அம்பேத்கார், காமராஜர் ஆகியோரை படிக்க வேண்டும் என்று விஜய் கூறியதை வரவேற்பதாகவும் கூறினார். பிரதமர் மோடி உள்நாட்டில் பற்றியெறியும் மணிப்பூருக்கு செல்லாமல், அமெரிக்காவுக்கு செல்வதை குறை கூறியவர், உடனடியாக மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த
Month:
எரியும் மணிப்பூர்…
மணிப்பூரில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தாலும், அதன் எண்ணிக்கை தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு அமைதியை நிலைநாட்ட தவறிய ஒன்றிய- மாநில பாஜக அரசுகளை கண்டித்து நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சென்னை- எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல், அதை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது. அதையும் கடந்து தடுப்பு இரும்பு வேலிகளும் அமைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் முன்னேற விடாமல் கைது செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துணை கமிஷனர் நேரில் வந்து ரயில் நிலையத்திற்குள் போராட்டக்காரர்கள் புக முடியாத அளவுக்கு காவல்துறையை இயக்கி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் போது மணிப்பூரில் நடைபெறும் கலவரங்களையும்- மனித உரிமை மீறல்களையும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறினார். பிறகு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா அவர்கள் அங்கு ஒன்றிய அரசு உடனடியாக அனைத்து கட்சி குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டு… சென்னையில் ரயில் மறியல்…. மஜக போராட்ட களத்தில் திரளானோர் கைது….
மணிப்பூரில் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டு, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகி உள்ளனர். 60 க்கும் மேற்பட்ட தேவாலயங்களும், சில இடங்களில் கோயில்களும் தாக்கப்பட்டுள்ளன. பழங்குடிகள், கிரித்தவர்கள் மீதான தாக்குதல்கள் பரவலாக நடந்து வரும் நிலையில், இதை ஒன்றிய அரசும், மாநில பாஜக அரசும் அரசியல் ஆதாய நோக்கோடு அணுகுகின்றன. இதை கண்டித்து தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் இன்று எழும்பூர்- ரயில்நிலையம் அருகில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முழக்கங்களை எழுப்பி மறியலுக்கு புறப்பட்டவர்களை காவல்துறையினர் வீரன் அழகு முத்துக்கோன் சிலை அருகில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது அங்கு போராட்டக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, #காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், ஆகியோர் ஊடகங்களிடம் போராட்ட நோக்கம் குறித்து பேட்டியளித்தனர். பிறகு அவர்களும் தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர். தியாகு, தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச் செயலாளர் வேணுகோபால், திராவிட
கோவை கண்டன பொதுக்கூட்டம்… மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம்… மஜக பங்கேற்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் நடைப்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து கோவையில் எதிர்வரும் ஜூன் 16 அன்று திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது குறித்த முன் ஆலோசனை கூட்டத்திற்கு திமுக சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு தரப்பட்டது. இக்கூட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமையில் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் PMA.பைசல், மாவட்ட பொருளாளர் எம்.சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் H.M.முஹம்மது ஹனீப், AS.ஜாபர் சாதிக், KTU காஜா, ஆயில் ஹக்கிம், அன்வர் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரோஸ் கான் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறைவாசிகள் விடுதலை களம்….
ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது... முதல்வர் அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கோரிக்கை வைக்கிறோம். அதற்காக ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுகிறோம். பாஜக-வை காட்டி எங்களை இனியும் ஏமாற்ற முடியாது. நாங்கள் ஒன்றும் இலவச வாக்காளர்கள் அல்ல. 1995-க்கு பிறகு முஸ்லிம் சமூகம் அரசியல் அறிவில் தெளிவுப்பெற்றிருக்கிறது. 2000-த்திற்கு பிறகு பிறந்த தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். முன்பு போல ஒரு கட்சிக்கு அல்லது ஒரே கூட்டணிக்கு ஒட்டுப் போடுவதில்லை. அந்தந்த தேர்தலுக்கு ஏற்ற சூழலை கவனத்தில் கொண்டே ஓட்டுப் போடும் முடிவை எடுக்கிறார்கள். 1995-க்கு பிந்தைய அவர்களது வாக்களிப்பை உன்னிப்பாக கவனித்தால் இது புரியும். பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இம்முறை திமுக தலைமையிலான கூட்டணிக்கு சிறுபான்மையினர் வாக்களித்தார்கள் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையில் முஸ்லிம் கைதிகள் புறக்கணிக்கப்படுவது அவர்களிடம் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீவிர பரப்புரை செய்தவர்களே இவ்விஷயத்தில் முதல்வரையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்களின் முகநூலிலும், வாட்ஸ் அப் குழுமங்களில் கடும் விவாதங்கள் நடக்கிறது. முஸ்லிம் மஹல்லாக்களில் (