மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டு… சென்னையில் ரயில் மறியல்…. மஜக போராட்ட களத்தில் திரளானோர் கைது….

மணிப்பூரில் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டு, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகி உள்ளனர்.

60 க்கும் மேற்பட்ட தேவாலயங்களும், சில இடங்களில் கோயில்களும் தாக்கப்பட்டுள்ளன.

பழங்குடிகள், கிரித்தவர்கள் மீதான தாக்குதல்கள் பரவலாக நடந்து வரும் நிலையில், இதை ஒன்றிய அரசும், மாநில பாஜக அரசும் அரசியல் ஆதாய நோக்கோடு அணுகுகின்றன.

இதை கண்டித்து தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் இன்று எழும்பூர்- ரயில்நிலையம் அருகில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

முழக்கங்களை எழுப்பி மறியலுக்கு புறப்பட்டவர்களை காவல்துறையினர் வீரன் அழகு முத்துக்கோன் சிலை அருகில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது அங்கு போராட்டக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அங்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, #காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், ஆகியோர் ஊடகங்களிடம் போராட்ட நோக்கம் குறித்து பேட்டியளித்தனர்.

பிறகு அவர்களும் தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர். தியாகு, தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச் செயலாளர் வேணுகோபால், திராவிட விடுதலை கழக தலைமை நிலைய செயலாளர் தபசி. குமரன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஸ்டீபன் , விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் , சமூக செயல்பாட்டாளர் குழந்தை உள்ளிட்ட வர்களும், பெரும் திராளாள #மஜக வினரும் கைது செய்யப்பட்டு 5 பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர்.

கைதின்போது பெண்கள் தவிர்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.