கோவை கண்டன பொதுக்கூட்டம்… மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம்… மஜக பங்கேற்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் நடைப்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து கோவையில் எதிர்வரும் ஜூன் 16 அன்று திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

அது குறித்த முன் ஆலோசனை கூட்டத்திற்கு திமுக சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு தரப்பட்டது.

இக்கூட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமையில் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் PMA.பைசல், மாவட்ட பொருளாளர் எம்.சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் H.M.முஹம்மது ஹனீப், AS.ஜாபர் சாதிக், KTU காஜா, ஆயில் ஹக்கிம், அன்வர் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரோஸ் கான் ஆகியோர் பங்கேற்றனர்.