You are here

மதிமுக புதிய நிர்வாகிகள்… வைகோ உள்ளிட்டோர் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ‘தமிழர் இதயம்’ அண்ணன் வைகோ அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காகவும் தன்னையே வருத்திக்கொண்டு போராடிய அவரின் அரசியல் தியாகங்கள் மறக்க முடியாதவை.

மீண்டும் அக்கட்சிக்கு தலைமை ஏற்பதன் மூலம் அவரது சேவைகள் தமிழகத்திற்கு தொடர்ந்து கிடைக்கவிருப்பது அறிந்து மகிழ்கிறோம்.

அரசியல் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள சூழலில் அவர் ஒரு போர் கருவியாக இயங்குவார் என்பதில் ஐயமில்லை.

மதிமுகவுக்கு முதன்மைச் செயலாளராக தேர்வாகியுள்ள நண்பர் துரை வைகோ அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமகால தமிழக அரசியலில் துடிப்புமிக்க இளைய அரசியல் தலைவராக உருவெடுத்துவரும் அவரது பணிகள் திராவிட அரசியலுக்கு வலு சேர்க்கும் என நம்புகிறோம்.

ஆடிட்டர் அ. அர்ஜுன் ராஜ், தோழர் மல்லை. சத்யா, மு.செந்திலதிபன், டாக்டர் ரொஹையா, K.A.M நிஜாம் உள்ளிட்ட மதிமுகவின் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசியலில் மதிமுக புதிய உயரத்தை தொட்டிட வேண்டும் என்ற எமது ஆவலையும் வெளிப்படுத்தி மகிழ்கிறோம்.

Top