
ஈரோடு, திருப்பூர், கோவை, மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான பவானி நதியில் ஆலைக்கழிவுகள் கலப்பதையும், இன்னொரு நொய்யல் ஆறாக பவானி ஆறு மாறுவதை தடுத்திட வலியுறுத்தியும் P.L.சுந்தரம் Ex MLA தலைமையில் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் S.A.சையத் அகமது பாரூக் அவர்கள் கலந்து கொண்டு ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கண்டன உரையாற்றினார்.
இதில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.