நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முன்சீ யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துனை பொது செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன், மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு அலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் "மக்களுடன் மஜக" நிகழ்வுகளை இம்மாதம் முழுவதும் வீரியமாக முன்னெடுப்பது என்றும், மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் J. ஷாகுல் ஹமீது, ஷேக் மன்சூர்,IT WING மண்டல செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது @ கண்ணுவாப்பா, அஹமதுல்லாஹ், பாலமுரளி, பேபி ஷாப் பஹ்ருதீன், மாவட்ட அணி நிர்வாகிகள் ஜெக்கரியா, முத்து முகமது, அப்துல் அஜிஸ்,ரிஃபாய், ஷாகுல் ஹமீது, திட்டச்சேரி ரிஸ்வான், அப்துல் மாலிக், நாகை அணிஸ், திட்டச்சேரி பேரூராட்சி செயலாளர் முகமது இப்ராஹிம், நாகை நகர செயலாளர் அஜிஜுர் ரஹ்மான், நகர துணைசெயலாளர் அப்துல் காதர், நாகூர் நகர செயலாளர் ஷாகுல்
Month:
மழை நீரில் மூழ்கிய பயிர்கள்… ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு தேவை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!
தை பொங்கலுக்கு பிறகு பிப்ரவரி மாத தொடர் கன மழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை தொடர்ந்து இரண்டாவது நாளாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டு வருகிறார். நேற்று நாகை மாவட்டத்தை ஆய்வு செய்து விட்டு, இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிக்கு வருகை தந்தவர், கட்டிமேடு, ஆதிங்கம், பாண்டி, பிச்சன்கோட்டகம் பகுதிகளில் மழையில் மூழ்கிய வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது... பிப்ரவரி மாத திடீர் மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் இப்பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கால்வாய்கள் தூர் வாரப்படாததால், மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி விட்டது. இதை அதிகாரிகள் இனி கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு அறுவடை செய்யாத அனைத்து விவசாயிகளுக்கும் பாராபட்சமின்றி, ஏக்கர் ஒன்றுக்கு தலா 25 ஆயிரமும், காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி உரிய முழு இழப்பீடும் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் . இவ்வாறு பேட்டியளித்தார். மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கும் இதை மஜக எடுத்துச் செல்லும் என்றும் கூறினார். நாளை மயிலாடுதுறை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப் போவதாகவும்
தஞ்சை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட "மக்களுடன் மஜக" செயல்திட்ட ஆலோசனை கூட்டம் அதிராம்பட்டினத்தில் மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா மற்றும் மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், துணை பொதுச்செயலாளருமான நாச்சிகுளம் தாஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்து, நிர்வாக பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இதில் பங்கேற்ற பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிய கிளைகளை கட்டமைப்பது குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். பகுதிவாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை வலிமை படுத்தும் பன்முக அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார். பிறகு நிரப்பப்படாத பொறுப்புகளை பூர்த்தி செய்வது குறித்தும், செயல்படும் புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது, பிறகு நகர துணை செயலாளர் பாசித் தந்தை மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பைசல், IT WING மாவட்ட செயலாளர் JS. சாகுல் ஹமீது நகர செயலாளர் அதிரை மர்ஜிக் B.Com நகர துணை செயலாளர் பாசித்,
திடீர் மழையால் விளை நிலங்கள் பாதிப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!
பிப்ரவரி மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் பெய்த மழையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட மகிழி, திருப்பூண்டி மற்றும் வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட தலைஞாயிறு, விழுந்தமாவடி, புதுப்பள்ளி பகுதிகளில் மழையில் மூழ்கிய விளை நிலங்களை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் மற்றும் மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் உடன் வருகை தந்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் மூழ்கி அழுகிய நிலையில் இருந்ததையும், முளை விட்டிருப்பதையும் விவசாயிகள் வேதனையுடன் காட்டினார்கள். பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு தலா 25 ஆயிரமும் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீடு வழங்கவும் மஜக சார்பில் பரிந்துரைப்பதாக அவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் ஆறுதல் கூறினார். இதில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர், மற்றும் மாவட்ட செயலாளர் கமல் ராம், ஒன்றிய செயலாளர் அமானுல்லாகான் ஆகியோர் உடன் வந்து பாதிப்புகளை விளக்கினார்கள். பிறகு பொதுச்செயலாளர் அவர்கள் அதன் தலைவர் திரு P.R .பாண்டியன்
விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் மகபுஜான் அவர்களின் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகர் மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தல், நடப்பு மாதத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கண் மருத்துவ முகாம் நடத்தவது என்றும், ராஜபாளையத்தில் கம்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும் மேலும் கம்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், "மக்களுடன் மஜக" செயல் திட்டத்தின் கிழ் ராஜபாளையத்தில் அரசு திட்டங்கள் அனைத்தும் தீவிரப்படுத்த கோரி அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கவும், மேலும் மாவட்ட முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் க. தமீமுன் அன்சாரி உள்ளிட்ட மாவட்ட மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.