நாகை மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முன்சீ யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் துனை பொது செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன், மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு அலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் “மக்களுடன் மஜக” நிகழ்வுகளை இம்மாதம் முழுவதும் வீரியமாக முன்னெடுப்பது என்றும், மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் J. ஷாகுல் ஹமீது, ஷேக் மன்சூர்,IT WING மண்டல செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது @ கண்ணுவாப்பா, அஹமதுல்லாஹ், பாலமுரளி, பேபி ஷாப் பஹ்ருதீன், மாவட்ட அணி நிர்வாகிகள் ஜெக்கரியா, முத்து முகமது, அப்துல் அஜிஸ்,ரிஃபாய், ஷாகுல் ஹமீது, திட்டச்சேரி ரிஸ்வான், அப்துல் மாலிக், நாகை அணிஸ், திட்டச்சேரி பேரூராட்சி செயலாளர் முகமது இப்ராஹிம், நாகை நகர செயலாளர் அஜிஜுர் ரஹ்மான், நகர துணைசெயலாளர் அப்துல் காதர், நாகூர் நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, மஞ்சை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம், மஜக நிர்வாகிகள் அப்துல்லா, கலீல்,அய்யுப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.