நெய்வேலி அனல் மின் நிறுவன (NLC) விரிவாக்கத்திற்கு 25 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி நிலக்கரி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தனியார்மயம் ஆக்கப்படும் சூழல் இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. மக்களை எதிர்காலத்தில் தவிக்க விடக்கூடிய இந்தத் திட்டத்திற்கு எதிராக, மனிதநேய ஜனநாயக கட்சி மாபெரும் முற்றுகை போராட்டத்தை எதிர்வரும் பிப்ரவரி 11, அன்று மதியம் 3 மணிக்கு நடத்தவிருக்கிறது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், இயக்குனர் தங்கர்பச்சான், தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் கெளதமன், மித்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜ், விசிக மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி.சு.திருமார்பன், தமிழ்நாடு இளைஞர் சங்க தலைவர் மதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் E.N.அறிவழகன், சமூக செயல்பாட்டாளர் கூட்டு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர்
Month:
சிறைவாசி அபுதாஹிர் மரணம்… நீதிக்கு இன்னுமா உறக்கம்?
நீண்ட கால ஆயுள் சிறைவாசியான அபுதாஹிர் அவர்கள் தனியார் மருத்துவமனையில் உயர் மருத்துவ சிகிச்சையில் போராடிய நிலையிலேயே இன்று உயிரிழந்திருக்கிறார். அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினரின் துயரில் பங்கேற்கிறோம். இந்தருணத்தில் தமிழக அரசு, 20 ஆண்டுகளை கடந்த நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையை இரக்கத்துடன் பரீசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். முதல் கட்டமாக 50 வயதை கடந்த நோயாளி கைதிகளையாவது பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரம் ஆகும். நீண்ட கால சிறைவாசிகளுக்கான நீதி என்பது இன்னும் உறக்கத்தில் இருப்பதை ஏற்க முடியாது. மனிதாபிமானம் புதைக்குழிக்குள் மூழ்குவதை அனுமதிக்க கூடாது. தமிழக அரசு இவ்விஷயத்தில் தாமதமின்றி நல்ல முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 08.02.2023
நியமன அறிவிப்பு…
மஜக சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநில பொருளாளராக, சேலம். தாஜ்தீன் அலைபேசி; 94432 78873 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு கட்சியினர் நிர்வாக ரீதியாக முழு ஓத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவண் ; மு. தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளார் மனிதநேய ஜனநாயக கட்சி 08-02-2023
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு..
கட்சியின் கட்டுக்கோப்பு, கண்ணியம் ஆகியவற்றை பாழ்ப்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டதை அடுத்து பின்வரும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. 37 மாவட்டங்கள், மாநில அணிகள் மற்றும் வெளிநாடுகளின் 2 மண்டலங்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பரிந்துரையை ஏற்று, மாநில பொருளாளர் எஸ். எஸ். ஹாருண் ரஷீத், அவைத்தலைவர் சம்சுதீன் நாஸர் உமரி, மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது, கே.ஏ.முஹம்மது சைஃபுல்லாஹ் ஆகிய நான்கு பேரும் கடந்த 31- 1- 2023 அன்று சென்னையில் நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவின் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இந்த முடிவுகள் இன்று நடைப்பெற்ற செயற்குழுவை தொடர்ந்து மாலையில் நடைபெற்ற சிறப்பு நிர்வாக குழுவிலும் விரிவாக விவாதித்து வெளியிடப்படுகிறது. இவண் மு தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 07-02-2023
பாராளுமன்றத் தேர்தல்! எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்…! மஜக தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று தஞ்சாவூரில் - கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும், மாநில துணை செயலாளர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இச்செயற்குழுவில் கட்சியின் வளர்ச்சியையும், வலிமையையும் முன்னிறுத்தி விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டது. பிறகு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது... 1) தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து வாடும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை, பொது மன்னிப்பின் கீழ் தமிழக அரசு சாதி, மத, வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. 2) நீதியரசர் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், சமவாய்ப்பு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. 3) டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரியில் பருவம் தப்பி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வர் தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இச்செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரம்