கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி ஒன்றியம் பெட்டபள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் சேவைகளினால் ஈர்க்கப்பட்டு பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தன்னெழுச்சியாக இளைஞர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். கடந்த இரு மாதங்களாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மஜக-வில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர், மேலும் விரைவில் பிரம்மாண்ட விழாவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் பெருந்திரளான இளைஞர் பட்டாளம் மஜக-வில் இணையும் விழா நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், மாநகர செயலாளர் முஹம்மத் உமர், பொருளாளர் முஹம்மத் சாகிப், மாவட்ட மருத்துவரணி செயலாளர் பாஷா, தளி ஒன்றிய செயலாளர் நியாமத் பாஷா, அன்சர், அக்பர் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Month:
ஈரோடு இடைத்தேர்தல்… களை கட்டுகிறது மஜகவின் தேர்தல் பிரச்சாரம்…!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் வேட்பாளர் உடன் இணைந்து பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரும்பும் திசை எங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்து தேர்தல் பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமையகத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
திருவள்ளூர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன் அவர்கள் தலைமையில் இன்று மஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் "மக்களுடன் மஜக" நிகழ்வுகளை இம்மாதம் முழுவதும் வீரியமாக முன்னெடுப்பது என்றும், மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர், மாவட்ட துணை செயலாளர் P.M. பஷீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமையகத்தில் செங்கை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
செங்கை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகீர் அவர்கள் தலைமையில் இன்று மஜக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு அலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் "மக்களுடன் மஜக" நிகழ்வுகளை இம்மாதம் முழுவதும் வீரியமாக முன்னெடுப்பது என்றும், மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது இந்நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர், MJTS மாநில துணை செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் தில்ஷாத், மாவட்டத் துணைச் செயலாளர் ஆலந்தூர் சலீம், அப்துல்லாஹ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி NLC எதிர்ப்பு போராட்டம்… சிதம்பரத்திலிருந்து 500க்கும் மேற்பட்டோர்களை திரட்டி செல்ல முடிவு..!
நெய்வேலி சுரங்கம் விரிவாக்க திட்டத்திற்கு 25000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்திய நெய்வேலி NLC நிறுவனத்திற்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பிப்ரவரி 11 அன்று சுரங்கம் 2 முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்ட முன்னேற்பாடு, மக்களை திரட்டுவது குறித்து கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் நகர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போராட்டத்திற்கு 500-க்கும் மேற்பட்ட மக்களை சிதம்பரத்தில் இருந்து திரட்டி செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.