You are here

தலைமையகத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன் அவர்கள் தலைமையில் இன்று மஜக தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் “மக்களுடன் மஜக” நிகழ்வுகளை இம்மாதம் முழுவதும் வீரியமாக முன்னெடுப்பது என்றும், மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர், மாவட்ட துணை செயலாளர் P.M. பஷீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top