இந்திய ராணுவத்தின் முப்படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் #அக்னி_பாத் திட்டம் கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. நான்காண்டு கால பணிக்காக மட்டும் முப்படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. வட மாநிலங்களில் கலவரங்களும், ரயில் எரிப்புகளும் நடைபெறுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் பரவுவதாக தகவல்கள் வருகின்றன. பல இடங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 17 வயது நிரம்பிய 21 வயதுக்குட்பட்ட இரு பாலர்களும் இத்திட்டத்தில் இணையலாம் என்றும், 4 ஆண்டுகள் ராணுவ சேவையாற்றிய பிறகு இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இறுதியாக அவர்களுக்கு 12 லட்சம் வரையிலான நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கூலிக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை விட மோசமானதாக உள்ளது. மேலும், இது மதிப்புமிக்க இந்திய ராணுவத்தின் கண்ணியத்தை பாழ்படுத்தும் செயலாகவும் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அதிகரித்து வரும் ராணுவ செலவுகளை கட்டுப்படுத்துவதும், ஒய்வுதிய செலவுகளை குறைப்பதும்தான் இதற்கு காரணம் என்று இதற்கு விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால் இதில் சாதாரண நிலையில் 15 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெறும் ராணுவ வீரர்களின் நலன்கள்
Month:
நுபுர்சர்மாவை அமித்ஷா பாராட்டியது ஏன்?? தஞ்சை மஜக ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி!!
ஜூன் 17, நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசிய பாஜக பிரமுகர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரியும், வலதுசாரி காவி பயங்கரவாதத்தை கண்டித்தும் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரையாற்றினார், இதில் மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில செயலாளர் யூசுப் ராஜா ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு.. பாஜக பிரமுகர் நுபுர் சர்மா என்பவர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசியதால் உலகம் முழுக்க கொந்தளிப்பு நீடிக்கிறது. பாஜகவினரால் உலக அளவில் இதுவரை இல்லாத நெருக்கடி நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. ஐ.நா சபை இதை கண்டித்திருக்கிறது.OIC நாடுகள் கண்டித்திருக்கின்றன. எதிரும், புதிருமாக செயல்படும் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒரணியில் நின்று நமது நாட்டை கண்டித்திருக்கின்றன. நமக்கு வர்த்தக நெருக்கடியும் உருவாகியிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, இந்தியா எல்லா மதங்களையும் மதிக்கிறது என விளக்கம் கொடுக்கிறது. ஆனால் நுபுர் சர்மா App india வுக்கு அளித்த பேட்டியில், எனது தொலைக்காட்சி பேட்டியை பார்த்து
நுபுர் சர்மாவை கைது செய்…! கோவையில் மஜக ரயில் நிலைய முற்றுகை! #மாநிலச் செயலாளர் கோவை ஜாபர் அலி தலைமையில் மஜகவினர் கைது!
ஜூன்; 17., நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பாஜகவின் நிர்வாகிகள் நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், அதற்காக குரல் கொடுத்த உத்திரப்பிரதேச மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்த பாசிச பாஜக அரசை கண்டித்தும். கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், அனிபா, ஜாபர் சாதிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் MH.ஜாபர் அலி அவர்கள் கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் மாநில துணைச் செயலாளர் A.அப்துல் பஷிர், IKP மாநில செயலாளர் லேனா இசாக் ஆகியோர் கண்டன கோஷங்களை முழங்கினர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பாசிச பாஜக அரசின் மதவாத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர் அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனால் அங்கு சிறிது
நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கண்டித்து..! சேதுபாவாசத்திரத்தில் மஜக ஆர்ப்பாட்டம்…!! துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு!
தஞ்சை.ஜூன்.17., தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், சேதுபாவாசத்திரம் கிளை ஏற்பாட்டில், சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி விவாதாத்தில் உலகெங்கும் வாழும் 200கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் "நபிகள் நாயகம்" (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி பேசிய நுபுர் சர்மா மற்றும் அதை அமோதித்து சமூக வலைதளத்தில் எழுதிய நவீன் ஜிண்டால் ஆகியோரை கண்டித்து. மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் இக்கூட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் பேராவூரணி சலாம், கோட்டைப்பட்டிணம் ஹாரிஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பெரியண்ணன் மற்றும் த.ம.வி.இ தலைவர் முனைவர். ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மஜக ஒன்றிய செயலாளர் நூரூல் அமீன் நன்றியுரையுடன் நிறைவு பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரை நகர துணை செயலாளர் பாசித் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உட்பட திரலானோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 17.06.2022
ஈமானை இடிக்கும் புல்டவுசர்கள் உண்டா? பொதக்குடி ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி..!
ஜூன்.17., திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில், நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசிய நுபுர் சர்மா மற்றும் ஜிண்டாலை கைது செய்யக் கோரியும், பாஜகவின் வலது சாரி பயங்கரவாதத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... நபிகள் நாயகத்தை நுபுர் சர்மா இழிவுப்படுத்தி பேசியதால் உலகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலக மக்களுக்கு ஒரு செய்தியை தெரியப்படுத்த விரும்புகிறோம் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தியது பாஜகவினர்தான். இந்திய மக்கள் பெரும்பான்மையோர் அவர்களை ஆதரிக்கவில்லை. இந்தியர்கள் ஒற்றுமையாக உள்ளோம். மோடி அரசு வெளிநாடுகளை சமாதானப்படுத்துகிறது. சரணாகதி அடைகிறது. ஆனால் உள்நாட்டில் நுபுர் சர்மாவை பாதுகாக்கிறது. அவரை கைது செய்யவில்லை. இதை வைத்து பெரும்பான்மை வாதத்தை வலுப்படுத்தும் நான்காம் தர அரசியலை செய்கிறது. நுபுர் சர்மா App india வுக்கு அளித்த பேட்டியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தனது பேச்சுக்கு பாராட்டு தெரிவித்ததாக கூறியுள்ளார். இதை அமித்ஷா இதுவரை மறுக்க வில்லை. வெளிநாட்டவர்களுக்கு ஒரு நிலைபாடு. உள்நாட்டில் ஒரு நிலைபாடு என்ற இரட்டை நிலையில் உள்ளார்கள். பிரதமர் மோடி இதில் தனது கள்ள மெளனத்தை கலைக்க வேண்டும்.