நுபுர்சர்மாவை அமித்ஷா பாராட்டியது ஏன்?? தஞ்சை மஜக ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி!!

ஜூன் 17,

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசிய பாஜக பிரமுகர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரியும், வலதுசாரி காவி பயங்கரவாதத்தை கண்டித்தும் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரையாற்றினார்,

இதில் மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில செயலாளர் யூசுப் ராஜா ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு..

பாஜக பிரமுகர் நுபுர் சர்மா என்பவர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசியதால் உலகம் முழுக்க கொந்தளிப்பு நீடிக்கிறது.

பாஜகவினரால் உலக அளவில் இதுவரை இல்லாத நெருக்கடி நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

ஐ.நா சபை இதை கண்டித்திருக்கிறது.OIC நாடுகள் கண்டித்திருக்கின்றன.

எதிரும், புதிருமாக செயல்படும் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒரணியில் நின்று நமது நாட்டை கண்டித்திருக்கின்றன.

நமக்கு வர்த்தக நெருக்கடியும் உருவாகியிருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, இந்தியா எல்லா மதங்களையும் மதிக்கிறது என விளக்கம் கொடுக்கிறது.

ஆனால் நுபுர் சர்மா App india வுக்கு அளித்த பேட்டியில், எனது தொலைக்காட்சி பேட்டியை பார்த்து விட்டு , உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.

இதை இந்த நிமிடம் வரை அமித்ஷா மறுக்கவில்லை.

இதற்கு மோடி என்ன சொல்லப் போகிறார்?

வெளிநாட்டிற்கு ஒரு விளக்கமும், உள்நாட்டில் அதற்கு எதிரான நிலைபாடுமா? என்பதை விளக்க வேண்டும்.

நுபுர் சர்மாவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?

அவர்தான் மன்னிப்பு கேட்டு விட்டாரே … என சிலர் வாதிடுகிறார்கள்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக எதைப் பேசினாலும் காப்பாற்ற மோடி இருக்கிறார் என்ற மனநிலை உருவாகியிருக்கிறது.

அது தகர்க்கப்பட வேண்டும் என்பதாலேயே அவர் கைது செய்யப்பட வேண்டும் என்கிறோம்.

நாங்கள் ராமரை இழிவுப்படுத்தினாலும், ஏசுவை இழிவுப்படுத்தினாலும், புத்தரை இழிவுப்படுத்தினாலும் இதே நிலைதான் எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இப்போராட்டத்திற்கு தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார்.

அத்தர் மஹல்லா பள்ளி இமாம் ரியாசுதீன் அவர்களும் கண்டன உரையாற்றினார்.

மாவட்ட பொருளாளர் அப்துல்லா, நகரச் செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் காமில், வீரை.மெய்தீன் உட்பட மஜகவின் பல்வேறு நிர்வாகிகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி எழுச்சிப் படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்
17.06.2022