ஜூலை:25, சேலம் மாவட்ட மஜகவில் திரளான இளைஞர்கள் இணைந்து வரும் நிலையில், மாநகரத்தில் உள்ள கிச்சிப்பாளையத்தில் மஜக மாவட்ட அலுவலகத்தை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் இன்று திறந்து வைத்தார். முன்னதாக கருவாட்டு பாலம் அருகே கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வுகளில் மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான பாபு ஷாகின்ஷா அவர்களும் பங்கேற்றார். முன்னதாக இரு சக்கர வாகன ஊர்வலமும் எழுச்சியாக நடைபெற்றது. அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பிறகு, மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அதில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் , ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக செப்டம்பர் 10 அன்று மஜக நடத்தும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்களை வரையுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இப்போராட்டத்திற்கு அதிகமான மக்களை பேருந்துகளிலும், வேன்களிலும் அழைத்து வர இப்போதே பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிறகு அங்கு வந்திருந்த தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தார். இந்நிகழ்வுகளில் மாவட்ட அமைப்புக் குழு தலைவர் சாதிக் பாட்ஷா, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அஸ்லம் கான், அப்ரார் பாஷா, சனாவுல்லா கான், அக்மல் உசேன், ஜான், ஜாபிர் மற்றும் தாஜ்தீன் உள்ளிட்ட
Month:
சிறந்த சமூக சேவைக்கான விருது! கத்தார் MKP க்கு வழங்கப்பட்டது!
தோஹா:25., கத்தாரில் திரைகடல் கடந்து சாதித்த தமிழர்களுக்கு மகுடம் சூட்டும் விதமாக #தமிழ்_மகன்_அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நேற்று மாலை தோஹாவில் அமைந்துள்ள அல்-அரபி உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்பட கலைஞர்கள் கத்தார் பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதினை மண்டல செயளாலர் ஆயங்குடி முஹம்மது யாசின் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கத்தார் மண்டல தலைமையக பொறுப்பாளர் கீழக்கரை முஹம்மது ஹுசைன், ஓமன் மண்டல தலைமையக பொறுப்பாளர் உத்தமபாளையம் முஹம்மது உவைஸ், மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அஹமது, மண்டல துனைச் செயளாலர்கள் மஞ்கக்கொல்லை முஹம்மது ஃபர்மானுல்லாஹ், திருச்சி நஜீர் பாட்ஷா, சிதம்பரம் நூர் முஹம்மது, IT WING செயலாளர் கருப்பூர் உபைஸ் ,IT WING துணைச் செயலாளர் திருச்சி ஹுசைன் மற்றும் சனயா மாநகர செயளாலர் கடலங்குடி முஹம்மது ஹர்ஃபின், ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 24/06/2022
VP சிங் பெயரில் பல்கலைக்கழகம்..! சேலம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்..!
ஜூன்:25, இன்று சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் வருகை தந்தார். அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் பாபு ஷாகின்சா, அவர்களும் உடன் வருகை புந்தார். அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் கூறியதாவது... இன்று முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் V.P சிங் அவர்களின் 92வது பிறந்தநாளில் சேலத்தில் சந்திக்கிறோம்.. அவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் 27% சதவீத இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்த மண்டல் கமிஷனை அமல்படுத்தியவர். இதனால் உயர்சாதியினரின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். அவர் இறந்த பிறகும், இப்போதும் கூட கோபத்தில் அவரது வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள். தமிழக மக்களிடம் அவருக்கு மரியாதை இருக்கிறது. அவரது பணிகளை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரால் தமிழக அரசு ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என மஜக வின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அப்பல்கலைக்கழகம் என்பது டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக பாட திட்டத்தை ஒத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். பாஜக வினரால் உலக அளவில் இந்தியாவுக்கு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக மக்களை
ஒசூரில் மஜக ஆர்ப்பாட்டம்..! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு..!
ஜூன் 24., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பாஜக பிரமுகர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, கண்டன கோஷங்களை எழுப்பினார். ஒசூரை சேர்ந்த திரளான மக்கள் கலந்துக் கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முகமது ஆரிவ், மாநில செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் செயத் நவாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சர்தார், அய்யூப் கான், மாநகர செயலாளர் யாகூப் ஜவ்ரு, ஓசூர் மாநகர செயலாளர் முகமது உமர், செயத் ஆரீப், யாசுப் ஜவ்ரு, முகமது அப்சல், முகமது யஹயா உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம். 24.06.2022
நுபுர் சர்மாவை கைது செய்! கூடலூரில் அனைத்து கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்! மஜக மாநில துணை செயலாளர் ஜாவித் ஜாபர் கண்டன உரை நிகழ்த்தினார்!
ஜூன்:24., நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட பாஜக நிர்வாகிகள் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி மஜக ஒருங்கிணைப்பில் கூடலூரில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மஜக நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தலைமை தாங்கினார். இதில் மஜக மாநில துணை செயலாளர் ஜாவித் ஜாபர், அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஜமாத் நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் மஜக மாவட்ட பொருளாளர் ரபீக், நன்றியுரை நிகழ்த்தினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 24.06.2022