இன்று சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய தமிழக ஆளுநர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( PFI )அமைப்பு குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆளுநர் இப்படி பேசுவது நியாயமா? என்ற கேள்விகள் எழுகிறது. இந்நிலையில் ஆளுநர் பொறுப்பில் இருக்கக் கூடியவர், ஒரு அமைப்பின் மீது குற்றம் சாட்டும் போது, அதற்கான ஆதாரத்தை கூறி தனது கருத்தை முன்வைக்க வேண்டும். மனம் போன போக்கில் பேசக் கூடாது. அது பதட்டத்தை தூண்டுவதாக அமைந்து விடக் கூடாது. பொது வெளியில் வீச்சரிவாள், வெட்டுக் கத்தி ஆகியவற்றோடு ஊர்வலம் போகும் அமைப்பினர், சிறுபான்மையினருக்கு எதிராக பகிரங்கமாக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் பயங்கரவாத அமைப்புகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது உள்துறை அமைச்சகத்தால் காவி பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் மீதெல்லாம் இத்தகைய விமர்சனங்களை ஆளுநர் முன்வைப்பாரா? என்ற ஜனநாயக சக்திகளின் கேள்விகளுக்கு பதில் தேவை. தமிழ் , தமிழர் ,தமிழகம் ஆகிய விவகாரங்களில் எதிர்மனநிலை கொண்டவராக தமிழக ஆளுநர் செயல் பாடுகிறார் என்ற விமர்சனங்கள் பரவலாகி வரும் நிலையில், அவரது இத்தகைய பேச்சுகள் ஏற்கத்தக்கதல்ல. இதை மனிதநேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச்
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட துணை செயலாளராக. N.அப்பாஸ் த/பெ; S.நெய்னா முஹம்மது 26/127, பங்களாளாளா தெரு, பேட்டை, திருநெவேலி 627004 அலைபேசி; 9087318794 நியமனம் செய்யபடுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்கின்றேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 06.05.2022
வறுமை ஒழிந்து வளங்கள் பெருகட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி!
முஸ்லிம்களின் வாழ்வில் இன்பம் பொங்கும் மாதமாக ரமலான் திகழ்கிறது. இம்மாதம் முழுக்க நோன்பிருந்து;பிரார்த்தனைகளில் திளைத்து ; உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி; ஏழைகளுக்கு செல்வங்களை வாரி வழங்கி ; அதன் வழியாக ஈகைத்திருநாளை கொண்டாடி மகிழும் பூரிப்புக்கு எல்லைகள் இல்லை. சுவையான உணவுகள் அருகில் இருந்தும்; அண்டை அயலார் யாரும் இல்லாத நிலையிலும் கூட ; இறைவனால் நாம் கண்காணிப்படுகிறோம் என்ற பக்தியுணர்வோடு நோன்புகளை கழிக்கும் பொழுதுகள் உன்னதமானவை. மனங்களை மலரச் செய்யும் புனித ரமலான் மாதத்தை நிறைவு செய்து, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத்திருநாளை உலகம் எங்கும் வாழும் சுமார் 200 கோடி மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். நமது இந்திய திருநாட்டில் பல் சமூக மக்களின் வாழ்த்துக்களோடு இத்திருநாள் மணம் வீசுகிறது. இந்நன்னாளில் வறுமை ஒழிந்து ; வளங்கள் பெருக இறைவனிடம் பிரார்த்திப்போம். அமைதியும், சமாதானமும் பரவி, சகோதரத்துவம் வளர உறுதியேற்போம். ஈகைத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, மே 2, 2022 ஹிஜ்ரி 1443