மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை! கடந்த 31 ஆண்டு காலமாக கொடும் சிறைவாசத்தில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகரமான 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அமைச்சரவை கூடி 161-வது பிரிவை பயன்படுத்தி இயற்றிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் அவர்கள் அலட்சியப்படுத்தியதும், ஒன்றிய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் பேரறிவாளன் தரப்பும், தமிழக அரசும் எடுத்த முன் முயற்சிகள் இன்று வெற்றிப் பெற்றிருக்கிறது. மேலும் தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று கூறியதுடன், அவர் முடிவெடுக்க தவறியதற்கு கண்டனத்தையும் தெரிவித்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு இத்தீர்ப்பு வலு சேர்த்திருக்கிறது. பல மாநிலங்களில் முதல்வர் மற்றும் ஆளுநர்களுக்கும் இடையே நிகழ்ந்து வரும் பனிப்போருக்கு இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் இந்தியா முழுக்க நீண்ட பல வருடங்களாக சிறையில் வாடும் பலரின் வாழ்வில் வெளிச்சம் பட்டிருக்கிறது. இதற்காக சளையாமல் பாடுபட்ட வீரத்தாய் அற்புதம்மாள், நுட்பமுடன் பணியாற்றிய வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக நீதி சிந்தனையாளர்கள், தமிழின உணர்வாளர்கள் என அனைவரோடும் மனிதநேய ஜனநாயக கட்சி மகிழ்ச்சியை பகிர்ந்துக்
Month:
சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
பிரதமரின் தொகுதியான வாரணாசியில் உள்ள கியான் வாபி பள்ளிவாசல் நான்கு நூற்றாண்டுகளை கடந்த பழமையானது. நீண்ட காலமாக சங்பரிவார் சக்திகள் இதில் சர்ச்சைகளை ஏற்படுத்தி இதை கைப்பற்றிட திட்டமிட்டு வருவது அவர்களின் வஞ்சக திட்டங்களில் ஒன்றாகும். இது தொடர்பான ஒரு வழக்கில் வாரணாசி நீதிமன்றம் கியான் வாபி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது 1991- வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டப் பாதுகாப்பை மீறும் தீர்ப்பாகும். நாட்டின் முக்கிய விவகாரங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஜனநாயக மரபுகளுக்கும், சட்டத்தின் அடித்தளங்களுக்கும் எதிராக இருப்பதாக சமீப காலமாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், இதனை கவலையோடு அணுக வேண்டியுள்ளது. சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அது ஃபாஸிஸ சக்திகளுக்கு துணைப் போய் விடக் கூடாது என்பதும் அனைவரின் அக்கறையாக உள்ளது. இதனிடையே வதந்திகளும் திட்டமிட்டு தூண்டப்படுவது கவலையளிக்கிறது. தொழுகைக்கு முன்பாக தண்ணீரை கொண்டு தூய்மை செய்யும் தடாகத்தில் சிவலிங்கம் இருப்பதாக ஒரு பொய் செய்தியை பரப்புவது, ஏதோ ஒரு மாபெரும் சதித் திட்டம் இருப்பதையே உணர்த்துகிறது. தெற்காசிய நாடுகளில் உள்ள பழமையான பள்ளிவாசல்களில்; இது போன்ற தண்ணீர் தடாகங்களின் நடுப்பகுதியில் அழகின் நிமித்தமாக நீறுற்றுகள் அல்லது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மஜக மாநில துணைச் செயலாளர் அஸாருதீன் பங்கேற்பு….!
மே:15., கடந்த 2009 அன்று இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். அப்போர் மே-17 அன்று முற்றுப்பெற்றது. இதை முன்னிட்டு வருடந்தோறும் இந்த வாரத்தில் தமிழகம் முழுவதும் நினைவந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு என்கிற அமைப்பின் பெயரில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அழைத்து நினைவந்தல் நடத்துவது கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. இதற்கு கவிஞர் காசி.ஆனந்தன் போன்ற சிலரே காரணம் என தமிழ் உணர்வாளர்கள் குற்றம் சுமத்தினர். இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ,வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்,மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,சமூக செயல்பாட்டாளர் கூட்டமைப்பு தலைவர் கௌஸ் உள்ளிட்டோர் அந்நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்தனர். மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு மறைமுக ஆதரவாக செயல்படும் பா.ஜ.க பங்கேற்கும் நிகழ்வில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என ஆரம்ப நிலையிலேயே தெரிவித்துவிட்டார். இந்நிலையில் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டியக்கம் சார்பில் மே-14 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் 3 நாட்களில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு,மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,ஜல்லிக்கட்டு ஜலீல்,லயோலா மணி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். தவிர்க்க இயலாத காரணத்தால் கடைசி
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின், தருமபுரி மாவட்ட செயலாளராக, A.ஜவஹர் பாஷா செம்மணஹள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணாபுரம், தருமபுரி. அலைபேசி; 9786185446 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 15.05.2022
மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது முன்னிலையில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!
மே:14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அக்மல், தலைமையில் சமூக ஆர்வலர் ஷமீர், அவர்களின் ஒருங்கிணைப்பில், மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளரும், இம்மாவட்ட மேலிட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பத்தூர்_மாவட்டம் 10.05.2022