You are here

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மஜக மாநில துணைச் செயலாளர் அஸாருதீன் பங்கேற்பு….!

மே:15., கடந்த 2009 அன்று இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். அப்போர் மே-17 அன்று முற்றுப்பெற்றது.

இதை முன்னிட்டு வருடந்தோறும் இந்த வாரத்தில் தமிழகம் முழுவதும் நினைவந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு என்கிற அமைப்பின் பெயரில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அழைத்து நினைவந்தல் நடத்துவது கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. இதற்கு கவிஞர் காசி.ஆனந்தன் போன்ற சிலரே காரணம் என தமிழ் உணர்வாளர்கள் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ,வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்,மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,சமூக செயல்பாட்டாளர் கூட்டமைப்பு தலைவர் கௌஸ் உள்ளிட்டோர் அந்நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு மறைமுக ஆதரவாக செயல்படும் பா.ஜ.க பங்கேற்கும் நிகழ்வில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என ஆரம்ப நிலையிலேயே தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டியக்கம் சார்பில் மே-14 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் 3 நாட்களில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு,மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,ஜல்லிக்கட்டு ஜலீல்,லயோலா மணி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

தவிர்க்க இயலாத காரணத்தால் கடைசி நேரத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கலந்துக்கொள்ள முடியாமல் போனதால், அவர் சார்பில் மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் பங்கேற்றார்.அவருடன் மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர் அஹமது அவர்களும், மஜக வினரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி உணர்வுபூர்வமாக நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
14.05.2022

Top