நெல்லை.ஏப்.03., பாளையங்கோட்டை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் #திமுக வேட்பாளராக உதயசூரியனில் போட்டியிடும் திரு #அப்துல்_வஹாப் அவர்களை ஆதரித்து #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். மக்கள் அலையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி, INLP சார்பில் மாநில செயலாளர் கோவை பல் நாசர் ஆகியோரும் பங்கேற்றனர். வேட்பாளர் அப்துல் வஹாப் அவர்கள் மஜகவின் அரசியல் நிலைபாட்டை வெகுவாக பாராட்டி துணிச்சலான முடிவு என வர்ணித்தார். இப்பொதுக் கூட்டம் வாக்கு வித்தியாசத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தரும் என கூட்டத்திற்கு வந்த பலரும் கூறினர். இதில் பேசிய பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மதவாத மலைப்பாம்பை விரட்டி இரும்பு தடி வேண்டுமா? பிளாஸ்டிக் குழாய் வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். இதை விரட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற இரும்பு தடி தான் சரியான தீர்வு என்பதால் வாக்குகள் சிதறாமல் இக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும் ஃபாஸிஸம் எந்த மதத்தின் வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்போம் என்றும், ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக
Month:
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்.! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு!
கோவை:ஏப்.02., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்களுக்கு வாக்கு சேகரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின், செல்வபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய பகுதி பொறுப்பாளர்கள் அனிபா, இப்ராகிம், ஆகியோர் தலைமையில் 77 வது வார்டு செயலாளர் பயாஸ், துணைச் செயலாளர்கள் பீர்முகமது, நவ்பல், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_மாநகர்_மாவட்டம் 02-04-2021
ஏர்வாடியில் ரூபி R மனோகரனுக்கு பரப்புரை..! பேராதரவு பெருக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பரப்புரை..!!
நெல்லை.ஏப்.02., இன்று நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரூபி ஆர்.மனோகரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். ஏன் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்கான காரணங்களை அடுக்கியவர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி அவசியத்தையும் விளக்கினார். வேட்பாளர் ரூபி மனோகரன் அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார். கட்சி சார்பற்ற பொதுமக்கள் மஜக-வின் முடிவை பாராட்டி அவருக்கு கை கொடுத்து வாழ்த்தினர். கட்சி சார்பற்ற 30 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் வருகைக்காக காத்திருந்து கேட்டதாக காங்கிரஸ்காரர்கள் பொதுச்செயலாளரிடம் கூறினர். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் மூஸா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நெல்லை இக்பால், மதுரை கனி, மனிதநேய கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் பத்தமடை கனி, ஒன்றிய செயலாளர் கோதர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜாகிர், மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி முஸ்தாக்,
பத்தமடையில் மக்கள் வெள்ளத்தில் பரப்புரை! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
நெல்லை.ஏப்.02., நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் திரு.ஆவுடையப்பன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். சுட்டெரிக்கும் வெயிலில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர் மஜக எடுத்த தியாகபூர்வ முடிவை கூறியபோது மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். பிறகு பத்தமடையை சேர்ந்த இளைஞர்கள் பொதுச்செயலாளரை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இது அரை மணி நேரம் நீண்டது மாற்று அரசியலை போற்றும் வகையில் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். உதயசூரியன் சின்னத்தில் சிதறாமல் வாக்குகள் போடுமாறு அனைவரையும் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார். முன்னதாக வேட்பாளர் திரு.ஆவுடையப்பன் அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் மூஸா, தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை கனி, மனிதநேய கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் பத்தமடை கனி, ஒன்றிய செயலாளர் கோதர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜாகிர்,
உதகை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!
ஏப்.02., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் உதகை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கணேஷ், அவர்களுடன் மஜக வினர் உதகை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து மஜக வினர் வாக்கு சேகரித்தனர். இதில் நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமால்தீன், தலைமையில் மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீத், ரிஸ்வான், மற்றும் மஜக வினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 02.04.2021