You are here

ஏர்வாடியில் ரூபி R மனோகரனுக்கு பரப்புரை..! பேராதரவு பெருக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பரப்புரை..!!


நெல்லை.ஏப்.02.,

இன்று நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரூபி ஆர்.மனோகரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.

ஏன் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்கான காரணங்களை அடுக்கியவர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி அவசியத்தையும் விளக்கினார்.

வேட்பாளர் ரூபி மனோகரன் அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார்.

கட்சி சார்பற்ற பொதுமக்கள் மஜக-வின் முடிவை பாராட்டி அவருக்கு கை கொடுத்து வாழ்த்தினர்.

கட்சி சார்பற்ற 30 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் வருகைக்காக காத்திருந்து கேட்டதாக காங்கிரஸ்காரர்கள் பொதுச்செயலாளரிடம் கூறினர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் மூஸா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நெல்லை இக்பால், மதுரை கனி, மனிதநேய கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் பத்தமடை கனி, ஒன்றிய செயலாளர் கோதர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜாகிர், மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி முஸ்தாக், ஏர்வாடி பேரூர் செயலாளர் ஜாபர் சாதிக், பொருளாளர் பீர் முகைதீன், துணை செயலாளர் ஷேக் முகைதீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#நெல்லை_மாவட்டம்
02.04.2021

Top