நெல்லை.ஏப்.02.,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் திரு.ஆவுடையப்பன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
சுட்டெரிக்கும் வெயிலில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர் மஜக எடுத்த தியாகபூர்வ முடிவை கூறியபோது மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
பிறகு பத்தமடையை சேர்ந்த இளைஞர்கள் பொதுச்செயலாளரை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இது அரை மணி நேரம் நீண்டது மாற்று அரசியலை போற்றும் வகையில் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.
உதயசூரியன் சின்னத்தில் சிதறாமல் வாக்குகள் போடுமாறு அனைவரையும் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக வேட்பாளர் திரு.ஆவுடையப்பன் அவர்கள் பொதுச் செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், ஐடி விங் மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ், மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் மூஸா, தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை கனி, மனிதநேய கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் பத்தமடை கனி, ஒன்றிய செயலாளர் கோதர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜாகிர், பத்தமடை நகர செயலாளர் செய்யது, மல்கா மணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
02.04.2021