மார்ச்.30, இன்று திருச்சி (கிழக்கு) தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இனிகோ.இருதயராஜ் (கிறித்துவ நல்லெண்ண இயக்கம்) அவர்களுக்கு 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பரப்புரை செய்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு சமூக சேவையில் ஈடுபட்ட சேவை எண்ணம் கொண்டவர் இனிக்கோ இருதயராஜ் என தனது பரப்புரையில் குறிப்பிட்டு அவரை தனது இனிய நண்பர் என்றும் கூறி வாக்கு கேட்டார். இதில், மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், திருச்சி மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர் தலைமையில் பொருளாளர் அந்தோணிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, ஷேக் அப்துல்லா, முஹம்மது பீர்சா மற்றும் அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #TNElection2021 #திருச்சி_மாவட்டம்.
Month:
பவானி சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்.! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு!
பவானி:மார்ச். 30., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பவானி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் KP. துரைராஜ் அவர்களுக்கு வாக்கு சேகரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின், பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் பவானி சாதிக், அவர்கள் தலைமையில் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 30-03-2021
திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மஜகவினர் வீடு வீடாக வேட்பாளருடன் வாக்கு சேகரிப்பு
திருப்பூர்.மார்ச்.30, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் க.செல்வராஜ், அவர்களை ஆதரித்து தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முஸ்தாக் அகமது, அவர்கள் தலைமையில் மஜக வினர் வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #TNElection2021 #திருப்பூர்_மாவட்டம் 29.03.2021
பவானி சாகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜக துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக் வாக்கு சேகரித்தார்!
மார்ச்.30., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுந்தரம், அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க கோரி சத்தியமங்கலம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக், அவர்கள் உரையாற்றினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சத்தியமங்கலம் நகர செயலாளர் சலீம், அவர்கள் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #பவானி_சாகர்_சட்டமன்ற_தொகுதி 29.3.2021
கன்னியாகுமரியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரை..! திரளான மஜகவினர் இணைந்து வாக்கு சேகரிப்பு..!
கன்னியாகுமரி.மார்ச்.30., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுரேஷ் ராஜன் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் குமார் (எ) விஜய் வசந்த் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், அமீர்கான், மாநகர துணை செயலாளர் பைசல்,மாநகர இஸ்லாமிய கலாச்சார பேரவை மாகின், மாநகர மாணவர் இந்தியா செயலாளர் மாஜித்,மாநகர மாணவர் இந்தியா துணை செயலாளர் முஹாஜிர் திரளான மஜக வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திரளானோர் திரண்டிருந்த இக்கூட்டத்தில் மஜக-வின் மூவர்ண கொடி அதிகளவில் பட்டொளி வீசி பறந்தது கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #MJK2021 #TNElections2021 #கன்னியாகுமரி_மாவட்டம் 30.03.2021