மார்ச்.30, திருச்சி - திருவெறும்பூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உதயசூரியனில் வாக்கு கேட்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பரப்புரை செய்தார். அப்போது பேசிய மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எனது சகோதரர், எனது தோழன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் எனக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறார் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பிறகு பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதன் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... எனது நண்பர் மகேஷ் பொய்யாமொழியும் நானும் சட்டசபையில் முதல் வரிசையில் இருந்தவர்கள். சபையில் நாகரிகமாகவும், அதிமுகவினரும் பாராட்டும் வகையில் பேசக் கூடியவர். எல்லோருடனும் எளிமையாகவும், நட்பாகவும் பழகும் பண்பாளர். அவர் தாத்தா அன்பில் தர்மலிங்கம், தந்தை அன்பில் பொய்யாமொழி வழியில் 3 தலைமுறைகளாக திமுக வில் பணியாற்றி தமிழகத்தில் அரசியல் களமாடுகிறார்கள். கலைஞரால் பாராட்டப் பெற்று அண்ணன் தளபதி அவர்களால் சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டவர். திமுக வின் நம்பிக்கைகுரிய அடுத்த தலைமுறை இளைஞர். அந்த வகையில் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கு உதய சூரியனில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நல்ல பண்பாளரான அவருக்கு மீண்டும்
Month:
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜக வினர்!
திருப்பத்தூர்.மார்ச்.30., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வாணியம்பாடி தொகுதி வேட்பாளர் திரு.என்.முஹம்மது நயீம் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஜகவினருடன் வாக்கு சேகரித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட துணைச்செயலாளர் ஷாநவாஸ், நகர செயலாளர் நயிம் கான் ஆகியோர் தலைமையில் நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #வாணியம்பாடி_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 30.03.2021
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளருடன் பரப்புரை களத்தில் மஜக!
மார்ச்.30, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ம. பிரபாகரன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேட்பாளருடன் இணைந்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஆதரவாக பல்வேறு சமுதாய மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தனர். இதில் மஜக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தாளம்பாடி முஜீப் ரஹ்மான் தலைமையில் N.ஜஹாங்கிர் பாஷா, அப்துல் ரகுமான், உதயசூரியன், குலாம் ரசூல் உள்பட திரளான மஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #பெரம்பலூர்_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021
தென்காசியில் முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மஜகவினர் திரளானோர் பங்கேற்பு..!
தென்காசி:மார்ச்.30., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம், தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அணைக்கட்டில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் பீர்மைதின், அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் வாவை இனாயத்துல்லா, ஹனிபா, மற்றும் ஒன்றிய, நகர, நிர்வாகிகள், மற்றும் பல்வேறு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #தென்காசி_மாவட்டம் 29.03.2021
எழும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!
சென்னை:மார்ச்.30., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் திரு.பரந்தாமன் அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வேட்பாளருடன் இணைந்து எழும்பூர் 77-வது வட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ரவூப் ரஹிம் தலைமையில் திரளான மஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #எழும்பூர்_சட்டமன்ற_தொகுதி 30.03.2021