திருவண்ணாமலை.மார்ச்.31., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் செங்கம் தொகுதியில் போட்டியிடும் திரு மு.பெ.கிரி அவர்களை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு அவர்கள், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஜகவினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பாபு, செங்கம் நகரச் செயலாளர் பாபுலால் ஆகியோர் தலைமையில் திரளான மஜக-வினர் பங்கேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #செங்கம்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 30.03.2021
Month:
மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கும் திமுகவை ஆதரிப்போம்! கோவை தெற்கு தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாருன் ரசீது வாக்கு சேகரிப்பு!
கோவை:மார்ச்.31., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயூரா ஜெயக்குமார், அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோவை கோட்டைமேடு, வின்சென் ரோடு, உக்கடம், பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் வாக்கு சேகரித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது, மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வரும் மத்திய அரசு தற்போது வேளாண் சட்டம் என்ற ஒரு கொடிய சட்டத்தை நம்முடைய விவசாயிகள் மீது திணித்து வருகிறது, ரேஷன் கடைகளை ஒழிப்பதே இச்சட்டத்தின் அடிப்படையாக உள்ளது, மக்களுக்காக பயனுள்ள ஒரு திட்டங்களை அரசு கொண்டு வருமானால் மக்கள் அதை ஆதரித்து வரவேற்பார்கள் ஆனால் வேளாண் சட்டத்தைப் பொறுத்தவரை விவசாயிகளையும் மக்களையும் பாதிக்கும் ஒரு கொடிய சட்டமாகும், அதனால்தான் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள் ஆனால் மத்திய அரசு அதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகிறது, தமிழகத்தில் பாஜக ஒரு
நேருவை 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்வீர்! திருச்சி மேற்கு தொகுதி பரப்புரையில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
மார்ச்.31, திருச்சி மேற்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் நேரு MLA அவர்களுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று பரப்புரை மேற்கொண்டார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் அவர்களும் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் தலைமையில் 150 க்கும் அதிகமான மஜகவினர் இருச்சக்கர வாகன பேரணியுடன் பரப்புரை செய்து பொதுச் செயலாளரை அழைத்து சென்றனர். தென்னூர் பகுதியில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பரப்புரை மேற்கொண்ட போது, வழியெங்கும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மாடிகளில் இருந்தவர்கள் கையசைத்து வரவேற்றனர். மஜகவின் தியாக பூர்வ தேர்தல் ஆதரவு முடிவுக்கு வாழ்த்துகளை கூறினர். பிறகு மூன்று இடங்களில் நேரு அவர்களை ஆதரித்து பேசினார். அப்போது சட்டசபையில் தனக்கு பின்வரிசையில் அமர்ந்திருந்து, தன்னோடு நெருக்கமாக பழகி அன்பு காட்டியவர் அண்ணன் நேரு என்றும், அவ்வப்போது ஆலோசனைகளையும் வழங்கி, தான் பேசும் கருத்துக்களை பாராட்டி மகிழ்வார் என்றும் கூறினார். நேருவுக்கு அமைச்சரவை காத்திருப்பதால் அவரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற
அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்.! மஜகவினர் திரளானோர் பங்கேற்பு!
அந்தியூர்:மார்ச். 31., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அந்தியூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் ஏஜி. வெங்கடாசலம் அவர்களுக்கு வாக்கு சேகரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஏகே ஷானவாஸ் , தலைமையில் மாவட்ட பொருளாளர் பவானி சாதிக், துணைச் செயலாளர் பாபுலால், கவுந்தி சாகுல் அமீது, அந்தியூர் நகர செயலாளர் மைதீன் பேக், நகர பொருளாளர் பிலால் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 30-03-2021
அதிரையில் திமுக வேட்பாளருடன் மஜகவினர் வாக்கு சேகரிப்பு!
மார்ச்.30, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள் இன்று அதிரை நகர் முழுவதும் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேக், நகர செயலாளர் அப்துல் சமது ஆகியோர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். கூட்டணி கட்சியினருடன் மஜகவினர் இணைந்து 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். இதில் மஜக நிர்வாகிகள் அஹமது அஸ்கர், பயாஸ் அகமது, மஸ்தான் உள்பட திரளான மஜக நிர்வாகிகள் அணிவகுத்து வந்தனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #பட்டுக்கோட்டை_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021