
கோவை:மார்ச்.31.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயூரா ஜெயக்குமார், அவர்கள் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து கோவை கோட்டைமேடு, வின்சென் ரோடு, உக்கடம், பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வரும் மத்திய அரசு தற்போது வேளாண் சட்டம் என்ற ஒரு கொடிய சட்டத்தை நம்முடைய விவசாயிகள் மீது திணித்து வருகிறது, ரேஷன் கடைகளை ஒழிப்பதே இச்சட்டத்தின் அடிப்படையாக உள்ளது, மக்களுக்காக பயனுள்ள ஒரு திட்டங்களை அரசு கொண்டு வருமானால் மக்கள் அதை ஆதரித்து வரவேற்பார்கள் ஆனால் வேளாண் சட்டத்தைப் பொறுத்தவரை விவசாயிகளையும் மக்களையும் பாதிக்கும் ஒரு கொடிய சட்டமாகும், அதனால்தான் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள் ஆனால் மத்திய அரசு அதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகிறது, தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதி வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி தமிழகத்தை அழித்து விடும், ஆகவே இது போன்ற மக்கள் விரோத சட்டங்களை கடுமையாக எதிர்க்கும் திமுக கூட்டணியை ஆதரித்து வெற்றிபெறச் செய்வோம், இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் திரு. மயூரா ஜெயக்குமார் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என பேசினார்.
முன்னதாக வேட்பாளரை ஆதரித்து மஜக துணை பொதுச்செயலாளர்கள் செய்யது அகமது பாருக், மன்னை செல்லச்சாமி, அவர்களும், மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, அவர்களும், உரையாற்றினர்.
இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மத்திய பகுதி பொருப்பாளர்கள் ஹனீபா, இப்ராஹிம், கிளை நிர்வாகிகள், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
30.03.2021