You are here

நேருவை 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்வீர்! திருச்சி மேற்கு தொகுதி பரப்புரையில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!


மார்ச்.31,

திருச்சி மேற்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் நேரு MLA அவர்களுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

அவருடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் அவர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் தலைமையில் 150 க்கும் அதிகமான மஜகவினர் இருச்சக்கர வாகன பேரணியுடன் பரப்புரை செய்து பொதுச் செயலாளரை அழைத்து சென்றனர்.

தென்னூர் பகுதியில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பரப்புரை மேற்கொண்ட போது, வழியெங்கும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மாடிகளில் இருந்தவர்கள் கையசைத்து வரவேற்றனர். மஜகவின் தியாக பூர்வ தேர்தல் ஆதரவு முடிவுக்கு வாழ்த்துகளை கூறினர்.

பிறகு மூன்று இடங்களில் நேரு அவர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது சட்டசபையில் தனக்கு பின்வரிசையில் அமர்ந்திருந்து, தன்னோடு நெருக்கமாக பழகி அன்பு காட்டியவர் அண்ணன் நேரு என்றும், அவ்வப்போது ஆலோசனைகளையும் வழங்கி, தான் பேசும் கருத்துக்களை பாராட்டி மகிழ்வார் என்றும் கூறினார்.

நேருவுக்கு அமைச்சரவை காத்திருப்பதால் அவரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

2 மணி நேரம் இத்தொகுதியில் நடைப்பெற்ற பரப்புரையில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட நிர்வாகிகள் அந்தோணிராஜ், சையது முஸ்தபா, தர்கா பாரூக், சேக் அப்துல்லாஹ், முகம்மது பீர்ஷா மற்றும் அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #TNElection2021
#திருச்சி_மேற்கு_தொகுதி.
30.03.2021

Top