ஜன.20, நாளை நடைபெற உள்ள பேரணிக்கு உள்ளூர் மக்களை பெருமளவில் பங்கேற்க செய்யும் வகையில் மாவட்ட செயலாளர் அஹமது கபீர் தலைமையில் மஜகவினர் மக்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். தஞ்சாவூர் பர்மா பஜாரில் பேரணிக்கான விளக்க துண்டு பிரசுரங்களை மஜகவினர் விநியோகித்தனர். தொடர்ந்து ஜமாத்துக்கள், பிரமுகர்களை சந்தித்து அழைப்பு கொடுத்து வருகின்றனர். வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும், பங்கேற்க வேண்டிய அவசியங்களை குறித்தும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருவையாறு ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான் தலைமையில் அழைப்புகள் கொடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதில், மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லாஹ், துணைச் செயலாளர் சாகுல் அமீது, வார்டு செயலாளர் காமில், திருப்பந்துருத்தி காலீத் ஆகியோர் தலைமையில் மஜகவினர் பங்கெடுத்துள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வரும் மஜகவினருக்கான வழிகாட்டல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
Month:
அறந்தாங்கியில் தஞ்சை பேரணிக்கு ஆதரவாக மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர விநியோகம்!
ஜன.20, நாளை தஞ்சையில் நடைபெற உள்ள பேரணிக்கு அழைப்பு விடுத்து அறந்தாங்கி நகர் முழுவதும் மக்களை சந்தித்து துண்டு பிரசுர விநியோகம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் தொடங்கியது. மஜக விவசாய அணியின் மாநில செயலாளர் எஸ்.ஏ. சலாம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரையைத் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகூர் கனி ஆகியோர் முன்னிலையில் வகிக்க, மஜக நிர்வாகிகள் சாகுல் ஹமீது, முகம்மது அலியார், அப்துல் அமீது, கலந்தர் மைதீன், ஜலாலுதீன், சோலைமலை, முகம்மது ஆசிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 19.01.2021
தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக காவிரி உரிமை மீட்பு குழு நடத்தும்…. பச்சைக் கொடி பேரணி..! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்கிறார்!
நாச்சிகுளத்தில் ஜனவரி 21 தஞ்சை பச்சைக்கொடி பேரணிக்கு மஜக சார்பில் நேரில் அழைப்பு! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் பங்கேற்பு!!
ஜன.20, தஞ்சையில் நாளை நடைபெற உள்ள பச்சை கொடி பேரணிக்கு நாச்சிகுளம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேரில் சென்று அழைப்புகள் கொடுக்கப்பட்டது. கடைத்தெருவில் துண்டு பிரசுர விநியோகமும் அதனை தொடர்ந்து விவசாயி சங்கத்தினர், வணிகர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து நாளை விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மஜக மாநில செயலாளர் தாஜுதீன் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வில் கிளை செயலாளர் ரியாஸ் அகமது, துணை செயலாளர்கள் இம்தியாஸ், இஜாஸ், இம்ரான் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி… குடந்தையில் மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர பரப்புரை! மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!!
ஜன.20, மத்திய அரசின் 3 உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் எதிர்வரும் ஜனவரி 21 அன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்துள்ளது. இன்று குடந்தையில் துண்டு பிரசுர பரப்புரை மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மாநில செயலாளர் H.ராசுதீன் அவர்கள் பங்கேற்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரையை தொடங்கி வைத்தார். பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், மக்கள் கூடுமிடங்களில் துண்டு பிரசுர பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தஞ்சையில் நடைப்பெறும் பேரணியில் தஞ்சை வடக்கு மாவட்டத்திலிருந்து பெருந்திரளனோர் சென்று பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்வில் மஜக துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, குடந்தை ஒன்றிய செயலாளர் இப்ராஹிம், குடந்தை நகர செயலாளர் ராஜ்முகமது, அசன், தாவூத் மேலும் மஜக சகோதரர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம். 19.01.2021