அபிராமம்.ஜன 20., இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிளப்பி திருமண மண்டபத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பரமக்குடி நகர செயலாளர் எமனை சாகுல் அவர்களின் இல்லத் திருமண விழா, மணமகன் முஹம்மது அலி ஜின்னா மற்றும் மணமகள் ஜெமிலா பானு (ஆலிமா) ஆகியோரின் திருமண நிகழ்வு நடைப்பெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். இதில் மாநில துணைச்செயலாளர் முஹம்மது சைபுல்லாஹ், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், சிவகங்கை மாவட்ட செயலாளர் காஜா மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மண்ணிவாக்கம் யூசுப், T.K.பசீர் அஹமது, எமனேஸ்வரம் கிளை செயலாளர் ஹபீப் ரஹ்மான், பரமக்குடி நகர பொருளாளர் ஜாபர் அலி கான், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் முஹம்மது ஹனிபா, மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #இராமநாதபுரம்_மாவட்டம் 20-01-2021
Month:
ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி டெல்டா மாவட்டங்களில் மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர பரப்புரை!
ஜன.20 மத்திய அரசின் 3 உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நாளை ஜனவரி 21 அன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது. இதற்கு மனிதநேய ஐனநாயக கட்சி கள ஆதரவு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், கடலூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் மஜக சார்பில் துண்டு பிரசுரங்களை நேற்றும், இன்றும் விநியோகித்து பரப்புரையானது நடைப்பெற்றது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், மக்கள் கூடுமிடங்களில் துண்டு பிரசுர பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #டெல்டா_மாவட்டங்கள்.
ஒரத்தநாட்டில்.. தஞ்சை பேரணிக்கு ஆதரவாக மஜக_முன்னெடுத்த துண்டு பிரசுர விநியோகம்!
ஜன.20, நாளை தஞ்சையில் நடைபெற உள்ள பேரணிக்கு அழைப்பு விடுத்து ஒரத்தநாடு நகர் முழுவதும் மக்களை சந்தித்து துண்டு பிரசுர விநியோகம் ஒரத்தநாடு கடை வீதியில் நகர செயலாலர் உமர் பாரூக் தலைமையில் தொடங்கியது. மஜக மாவட்ட பொருளாளர் ஒரத்தநாடு பஷீர் அஹமது துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரையைத் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் நூருல் அமீன், சர்புதீன்,ஆகியோர் முன்னிலையில் வகிக்க, மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம். 19.01.2021
நாகையில் தஞ்சை பேரணிக்கு ஆதரவாக மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர விநியோகம்!
ஜன.20, நாளை தஞ்சையில் நடைபெற உள்ள பேரணிக்கு அழைப்பு விடுத்து நாகை நகர் முழுவதும் துண்டு பிரசுர விநியோகம் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது. நாகை பேருந்து நிலையம் அருகில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக் அவர்கள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விநியோகத்தை துவங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா@சாகுல் ஹமீது, விவசாய சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் மஜக நிர்வாகிகள் முபாரக், அனஸ், ரிபாஃயூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம். 19.01.2021
அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் கனமழையால் நாசமாகிய பயிர்கள்..! உரிய இழப்பீட்டை பெற்று தரக்கோரி கடலூர் மாவட்ட விவசாயிகள் மு தமிமுன் அன்சாரி MLA உடன் சந்திப்பு..!
ஜனவரி 20, கடலூர் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் ஜனவரி மாத திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ள கடலூர் மாவட்ட விவசாயிகள் உரிய இழப்பீட்டை தமிழக அரசிடம் பெற்று தரவேண்டி தலைமை செயலகத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை அம்மாவட்டத்தின் வலுவான விவசாய அமைப்பான கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் P. வினாயகமூர்த்தி தலைமையில் சந்தித்தனர். விவசாயிகள் எப்போது எங்கு பாதித்தாலும் களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர் நீங்கள் தான். விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் சட்டமன்ற உறுப்பினர் தாங்கள் மட்டும் தான். தாங்கள் மிகவும் பாதித்திருப்பதாகவும் தாங்கள் தான் தமிழக அரசிடம் உரிய இழப்பீட்டை பெற்று தரவேண்டும் என்றும், களத்தில் இறங்கி தாங்கள் செய்யும் ஆய்வுகள் உற்சாகத்தை ஏற்படுத்துவதாகவும், நம்பிக்கையை தருவதாகவும் கூறினர். இது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தலைமை செயலகம் வந்திருப்பதாகவும், முதலமைச்சர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு உரிய இழப்பீட்டை பெற்று தருவதாக விவசாயிகளிடம் மு.தமிமுன் அன்சாரி MLA உறுதியளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம். 19.01.2021