அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் கனமழையால் நாசமாகிய பயிர்கள்..! உரிய இழப்பீட்டை பெற்று தரக்கோரி கடலூர் மாவட்ட விவசாயிகள் மு தமிமுன் அன்சாரி MLA உடன் சந்திப்பு..!


ஜனவரி 20,
கடலூர் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் ஜனவரி மாத திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ள கடலூர் மாவட்ட விவசாயிகள் உரிய இழப்பீட்டை தமிழக அரசிடம் பெற்று தரவேண்டி தலைமை செயலகத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை அம்மாவட்டத்தின்
வலுவான விவசாய அமைப்பான கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் P. வினாயகமூர்த்தி தலைமையில் சந்தித்தனர்.

விவசாயிகள் எப்போது எங்கு பாதித்தாலும் களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர் நீங்கள் தான். விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் சட்டமன்ற உறுப்பினர் தாங்கள் மட்டும் தான்.
தாங்கள் மிகவும் பாதித்திருப்பதாகவும் தாங்கள் தான் தமிழக அரசிடம் உரிய இழப்பீட்டை பெற்று தரவேண்டும் என்றும், களத்தில் இறங்கி தாங்கள் செய்யும் ஆய்வுகள் உற்சாகத்தை ஏற்படுத்துவதாகவும், நம்பிக்கையை தருவதாகவும் கூறினர்.

இது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தலைமை செயலகம் வந்திருப்பதாகவும், முதலமைச்சர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு உரிய இழப்பீட்டை பெற்று தருவதாக விவசாயிகளிடம் மு.தமிமுன் அன்சாரி MLA உறுதியளித்தார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.
19.01.2021